எழுத்தாளர் சுஜாதா பிறந்தநாள் இன்று(03/05/2020) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2020

எழுத்தாளர் சுஜாதா பிறந்தநாள் இன்று(03/05/2020)


CLERIHEW - க்ளெரிஹியூ

(சுஜாதா - 85வது  பிறந்த நாள் சமர்ப்பணம்)

இது ஒரு வேடிக்கை கவிதை வரிசை. இதைப்பற்றி சுஜாதா தனது கற்றதும் பெற்றதும் புத்தகம் இரண்டாம் பாகத்தில் சொல்லியிருக்கிறார்.
(நன்றி: ஆனந்தவிகடன்)

CLERIHEW - இதற்கான தமிழ் அர்த்தத்தை தேடியபோது எனக்கு கிடைத்த தகவல் -
முதல் வரியில் தலைசிறந்த ஒருவரின் பெயர் கொண்டிருக்கும் ஒரு துணுக்குப் பாட்டு  சுஜாதா என்ன சொல்லியிருக்கிறார்:
"எட்மென்ட் க்ளெரிஹியூ பெண்டலி  (1875-1965) என்னும் கவிஞர் அறிமுகப்படுத்திய பாவினம்  இது. ஒரு பிரபலமானவரைபற்றியும், அவரது பிரபலத்துக்கான காரணத்தையும் இணைத்து நான்கு  வரி வேடிக்கை கவிதை. உதாரணத்துக்கு, Humbri Devi சோடியம் என்னும் தனிமத்தை கண்டுபிடித்தவர்.

அவர் பற்றிய ஒரு கிளேரிஹியூ இது-
Sir Humphrey Davy
Abominated gravy
He lived with odium
Of having discovered Sodium

சுஜாதாவின் க்ளெரிஹியூ இவை:

01. கண்ணகி கதையால்
கண்ணில் நீர்வரக்
கலங்கவைத்தார்
இளங்கோவடிகள்

02. யாரிது என்று
வெள்ளைக்காரனை
சொல்லவைத்தவர்
பாரதி
இதுமட்டுமல்ல - சுஜாதா வாசகர்களை இந்த கிளெர்க்ஹியூ எழுதச்சொல்லி ஊக்கப்படுத்தினார்.

வாசகர்கள் எழுதி சுஜாதா தேர்வு செய்தவற்றில் இருந்து மூன்று இங்கு தருகிறேன்:

01. (காந்தி)
ஒரங்கி கட்டி
பீரங்கி வென்றார்
சாந்தி வழியில்
காந்தி.

02. (கல்கி)
சரித்திரம் படைக்க
சரித்திர நாவல்களை
Bulky-யாய் எழுதினர்
கல்கி.

03. (புத்தர்)
கலிங்கத்தால் கலங்கி
சோகமான அசோகன்
ரத்தம் வெறுத்து
யுத்தம் நிறுத்தி
புத்தம் வளர்த்தான்.

சுஜாதா கொடுத்த நிபந்தனைகள்:

01. நான்கு வரிகள் இருக்கவேண்டும்
02.பிரபலமானவர் பற்றி இருக்க வேண்டும்
03. ஓசைநயம் இருக்கவேண்டும்
04.சொற்களில் சிக்கனம் இருக்க வேண்டும்
05. முடிந்தளவு நகைச்சுவை கொண்டு வரவேண்டும் (கண்டிப்பாக அல்ல)
என்னுடைய முயற்சியில் வந்த ஒரு க்ளெரிஹியூ:

வடிவேலு-
“வாய் விட்டு சிரித்து
நோய் விட்டு போவதற்கு
பாய் சுருட்டி விழுந்தவர்
பலர் விரும்பும் வடிவேலு”

நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம். இது ஜஸ்ட் ஒரு கேம் ஷோ மாதிரி தான்.
உங்கள் க்ளெரிஹியூ பாராட்டு பத்திரங்களாக இருக்கட்டும்.

நீ ஊமையா?

ஆமா!

சுஜாதா ஜோக்.!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி