பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் 2 வாரம் தள்ளி வைக்க திட்டம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2020

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் 2 வாரம் தள்ளி வைக்க திட்டம்?


ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாததால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்தை, அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்க, பள்ளி கல்வி துறை ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள்களை, திருத்தும் பணி, வரும், 27ம் தேதி துவங்க உள்ளது.'இ - பாஸ்'இதற்காக விடை திருத்தும் முதுநிலை ஆசிரியர்கள், 26ம் தேதி பணிக்கு வர வேண்டும் என, கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் மாவட்ட எல்லைகள், 'சீல்' வைப்பால், ஆசிரியர்கள் பணிக்கு வர முடியாத சிக்கல் நிலவுகிறது. இது குறித்து, முதுநிலை ஆசிரியர்கள் கூறியதாவது: வெளி மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் மாவட்டங்களுக்கு, வர போக்குவரத்துவசதியில்லை.'இ - பாஸ்' அனுமதியும் கிடைக்கவில்லை.

பெரும்பாலான ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள், குறைந்த பட்சம், 60 கி.மீ.,க்கு அப்பால் உள்ளன. கொரோனா பாதிப்பால், மாவட்ட எல்லைகள், 'சீல்' வைக்கப்பட்டுள்ளதால், சொந்த வாகனங்களில் பணிக்கு செல்ல முடியவில்லை.இந்நிலையில், வரும், 27ம் தேதி விடை திருத்தம் துவங்கினால், 50 சதவீதஆசிரியர்கள் கூட பணிக்கு வர முடியாது. எனவே, ஊரடங்கு முடிந்ததும் விடைத்தாள் திருத்தத்தை துவங்கலாம்.

ஆசிரியர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள பள்ளி களில், விடைத்தாள் திருத்தப் பணியை ஒதுக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு :

ஆசிரியர்களின் வசிப்பிட விபரங்களை, தலைமை ஆசிரியர்கள் வழியே சேகரித்து, பணிகளை எளிதாக ஒதுக்கினால், ஆசிரியர்களும் மனநிறைவுடன் பணிகளை செய்வர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதற்கிடையில், விடைத்தாள் திருத்த பணியை, இரண்டு வாரம் தள்ளி வைக்க, பள்ளி கல்வி துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆகஸ்ட்டில் தான் உயர்கல்வி சேர்க்கை துவங்கும்; அதற்கு, ஜூலை, 15க்குள் தேர்வு முடிவு களை அறிவித்தால் போதுமானது.

எனவே, ஜூன், 8ல் விடைத்தாள் திருத்த பணிகளை துவங்கினால்,அந்த மாத இறுதிக்குள் முடிவுகளை வெளியிட வாய்ப்புஉள்ளதாக, பல்வேறு முதுநிலை ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும், அதிகாரிகளிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.எனவே, ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்படும் வரை, விடைத்தாள் திருத்தப் பணிகள் தள்ளி வைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

3 comments:

  1. பஸ் விட்ட பிறகு வைத்தால் நன்றாக இருக்கும். வேறு மாவட்டத்திற்கு செல்ல எந்த வாடகை கார் கேட்டாலும் யாருமே வர தயாராக இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வேறு மாவட்ட ஆசிரியர்களை அவர்கள் சொந்த மாவட்டத்திலேயே பேப்பர் திருத்த அனுமதிக்கலாம் அல்லது பஸ்கள் இயங்க ஆரம்பித்த உடன் பேப்பர் திருத்தலாம்.

      Delete
  2. நீங்கள் என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் எதுவும் நடக்காது. ஏனென்றால் இது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது ...நமது கடமையை செய்ய நாம் கட்டுப்பாடுடன் செல்ல வேண்டியதுதான் ..வேறு வழியில்லை ..அரசாங்க ஊழியர்களும் அரசு பள்ளி ஆசிரியர்களும் 24 மணி நேரமும் அரசாங்கம் செல்வது செய்யக் கடமைப்பட்டவர்கள் ஏனென்றால் நாம் அரசு ஊழியர்கள் ஊழியம் செய்ய கடமைப்பட்டவர்கள்...இதுதான் யதார்த்தம்...ஆட்டோ பிடித்து கார் பிடித்து வர வேண்டியதுதானே ..இல்லை என்றால் சம்பளம் தருவதில்லையா? அந்த பணத்தில் வாங்களேன் என்று சொல்வார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி