30.05.2020 முதல் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும், தவறும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை - CEO உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2020

30.05.2020 முதல் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும், தவறும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை - CEO உத்தரவு.


தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 30.05.2020 முதல் பணிக்கு திரும்ப வேண்டும் - விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலர்.

கொரானோ வைரஸ் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மார்ச் / ஏப்ரல் 2020 - இடைநிலை பொதுத்தேர்வினை ஒரு அறைக்கு 10 நபர்கள் என்ற வீதத்தில் தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக அறை கண்காணிப்பாளர்கள் தேவைப்படுவதால் , வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு / ஊராட்சி ஒன்றிய / நிதியுதவி தொடக்க / நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து , வருகின்ற 30.05.2020 முதல் 12.06.2020 வரை தவறாமல் வருகைதர வேண்டுமெனவும் , தனியாக வருகைப் பதிவேட்டினை மேற்கொண்டு அனைத்து ஆசிரியர்களின் வருகையை பதிவுசெய்து உடனுக்குடன் பெற்று இவ்வலுவலகம் அனுப்பி வைக்குமாறும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதற்கான ஒப்புதல் கடிதத்தினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .

குறிப்பு- இது தேர்வுகள் அவசரம் என்பதால் ஆசிரியர்கள் எவ்வித சுணக்கமும் இன்றி செயல்பட வேண்டுமெனவும் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்புமாறும் தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் எவ்வித விளக்கம் கோரப்படாமல் தங்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது .

9 comments:

  1. Appadiye villupuram CEO aluku oru helicopter vangithantha easy vanthurlam....enna sothanada Sami....

    ReplyDelete
  2. Govt. says education institutions are closed till 31st May. But those who are superior to govt. give instructions or orders to teachers according to their will to show they are more faithful to department.

    ReplyDelete
  3. Please open for school June 1st re open immediately sir

    ReplyDelete
  4. விளக்கம் ஏதும் கேட்காமல் நடவடிக்கை எடுக்க அதிகாரமே உமக்கு இல்லை... துறை தேர்வில் இன்னும் பாஸ் செய்யலியோ

    ReplyDelete
  5. விளக்கம் ஏதும் கேட்காமல் நடவடிக்கை எடுக்க அதிகாரமே உமக்கு இல்லை... துறை தேர்வில் இன்னும் பாஸ் செய்யலியோ

    ReplyDelete
  6. குறுநில மன்னரு சட்டம் போடுறாரு

    ReplyDelete
  7. அரசு தான் அடிமை என்றால், இந்த அலுவலர்கள் அவர்களின் செருப்புக்கு கீழே இருந்து தாங்குகிறார்கள்... நடைமுறை சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிகளை கூறுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி