ஏப்.30-ல் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கும் வயது நீட்டிப்பு சலுகை கிடைக்குமா?- உயர் நீதிமன்றம் உத்தரவு - kalviseithi

May 27, 2020

ஏப்.30-ல் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கும் வயது நீட்டிப்பு சலுகை கிடைக்குமா?- உயர் நீதிமன்றம் உத்தரவுசிவகங்கை மாவட்டம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நான் 30.4.2020-ல் பணியிலி ருந்து ஓய்வு பெற வேண்டும். எனக்கு 31.5.2020 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலை யில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 வரை உயர்த்தி தமிழக அரசு 7.5.2020-ல் ஆணை பிறப்பித்தது.

ஏப்.30-ல் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கும் வயது நீட்டிப்பு சலுகை கிடைக்குமா?- அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

சிவகங்கை மாவட்டம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நான் 30.4.2020-ல் பணியிலி ருந்து ஓய்வு பெற வேண்டும். எனக்கு 31.5.2020 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலை யில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 வரை உயர்த்தி தமிழக அரசு 7.5.2020-ல் ஆணை பிறப்பித்தது.


இந்த அரசாணையால் 31.5.2020-ல் வழக்கமாக ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். என்னைப் போல் ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்று பணி நீட்டிப்புப் பெற்றோருக்குப் பலனில்லை. இந்த அரசாணை ஆசிரியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது.

எனவே 31.5.2020-ல் ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தும் அரசாணையை ரத்து செய்து 30.4.2020-ல் ஓய்வு பெற்றோருக்கும் ஓய்வு வயது நீட்டிப்புச் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை என்னை (மே 31) பணியிலிருந்து விடுவிக்கத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஜவஹரும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி நிஷாபானு முன் காணொலிக் காட்சி மூலம் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுக்கள் தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு (மே 27) நீதிபதி ஒத்திவைத்தார்.

7 comments:

 1. இவ்வளவு நாள் அரசு சம்பளம் வாங்கி இலட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்தாலும் ஆசிரியர்களுக்கு ஆசை தீரவில்லை

  ReplyDelete
 2. Let us wait and see what the honourable court would say.

  ReplyDelete
 3. I am also having d same problem...can i get d mobile numbers of them....

  ReplyDelete
 4. உங்களை போன்று 31.03.2020 அன்று முடிதவங்க அபுரம் கேபாங்க ....

  ReplyDelete
 5. First இந்த superannuation யாருக்கும் தரக்கூடாது என்று அரசு அணை பிரபிக்கணும்

  ReplyDelete
 6. கொரோனா வந்தால் 59 டெங்கு வந்தால் 60 . சார்ஸ் வந்தால் 61 வெட்டுக்கிளி வந்து பயிர்கள் அழிந்தால்62 இவ்வாறு அரசு ஊழியர்கள் இறக்கும் வரை அரசு ஊழியர்கள் தான் பணம் இல்லாமல் நிலம் இல்லாமல் படித்தும் வேலை கிடைக்காமல் எங்களைப் போல் எத்தனை பேர் எதையும் சிந்திக்காத அரசாங்கம் இருந்து என்ன செய்ய? சிந்தியுங்க இளைஞர்களே

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி