பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடைக்குமா?. 8 ஆண்டு வேதனை முடிவுக்கு வருமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2020

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடைக்குமா?. 8 ஆண்டு வேதனை முடிவுக்கு வருமா?


'மே மாத சம்பளம் வழங்க வேண்டும்' என, பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, மாநில ஒருங்கிணைப்பாளர், செந்தில்குமார் அறிக்கை:

முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா, 2012 ஆம் ஆண்டில்,  அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தோடு, கல்விஇணைச்செயல்பாடும் முக்கியம் என கருதி
உடற்கல்வி, ஓவியம், கணினிஅறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி என 8 சிறப்பு பாடங்களில்
16 ஆயிரத்து, 549 பகுதிநேர ஆசிரியர்களை, 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமித்தார்.

ஓராண்டிற்கு அனைத்து மாதங்களும் சம்பளம் வழங்க, 99.29 கோடி ரூபாய் ஒதுக்கினார்.

ஆனால், பணி நியமனம் செய்த பின், மே மாதம் சம்பளம் தருவதில்லை.

அரசாணையில், 11 மாதங்களுக்கு மட்டும் சம்பளம் என்று குறிப்பிடாத போதும், கல்வித்துறை, ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்வது வருந்தத்தக்கது.


ஒரு மாதம் சம்பளம் இல்லாமல், அடுத்த மாதம், எப்படி குடும்பத்தை நடத்த முடியும்.

முடிந்துபோன  8 ஆண்டுகளுக்கு மே மாதம் சம்பளம் நியாயமாக கிடைத்திருக்க வேண்டும். ஆனாலும் தரவில்லை.

ஆரம்பத்தில் தரப்பட்ட ரூ.5ஆயிரம் சம்பளம், தற்போது ரூ.7700ஆக தரப்படுகிறது.

10கோடி மாதம் ஒன்றிற்கு சம்பளம் தர அரசு செலவிடுகிறது.

பணியில் சேர்ந்து 9வது  ஆண்டு மே மாதம் நடக்கிறது.

இம்மாதம் சம்பளம் கிடைக்க சமக்ர சிக்சா மாநில திட்ட இயக்குனர்
நிதி  கேட்டு  அரசுக்கு வேண்டுகோள் வைக்க வேண்டும்.
பள்ளிக்கல்வி அமைச்சர்  பரிந்துரை செய்ய வேண்டும்.
நிதி அமைச்சர் ஒப்புதல் தர வேண்டும்.
முதல்வர் ஆணையிட வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து உதவினால் மட்டுமே மே மாதம் சம்பளம் பிரச்சனைக்கு  தீர்வு ஏற்படும்.

ஆனால் அரசு இது குறித்து என்ன நிலையில் உள்ளது என தெரியவில்லை.

தற்போது ஊரடங்கால், பகுதி நேர ஆசிரியர்கள், வாழ்வாதாரம் இழந்து  உள்ளனர்.

எனவே இம்முறை மே மாதம் சம்பளம்  தமிழகஅரசு கொடுக்க,  வேண்டுகோள் வைத்து எதிர்பார்த்து வருகிறோம்.

இதற்கு, முதல்வர் நிதி ஒதுக்கி, நியமனம் செய்த 16549 பேரில் தற்போதுள்ள  12 ஆயிரம் பேருக்கு, மே மாத சம்பளம் வழங்க, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தொடர்புக்கு:-
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் நம்பர்:9487257203

10 comments:

  1. Govt nambaluku help panadhu sir

    ReplyDelete
  2. Poli part time teacher nu soilitu oru aramental naai varumey kanam adha

    ReplyDelete
  3. government arts college GUEST LECTURERS also did not get salary for april ,may salary.....
    ((APRIL,MAY...TWO MONTHS no salary))..now they are in critical situation to run their famalies.....in COVID 19 situation...govenment please help guest lecturer also...

    ReplyDelete
  4. இவர்கள் நியமித்த பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிய இந்த அரசு இதையாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி அரைநாள் மட்டும் வேலை அதுவும் வாரத்தில் 3 நாள் மட்டும் வேலை என்று எந்த வகையிலும் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியாத வகையில் நியமனம் செய்த இவர்களுக்கே இந்த புண்ணியம் சேரும். தற்போது இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே ஏற்படுத்தவில்லை இந்த அரசு. இதில் 58 வயது என்பதை 59 ஆக ஓய்வு வயது மாற்றப்பட்டு இளைஞர்களின் கனவில் மண்ணை இந்த அரசு அள்ளிப் போட்டிருக்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் சென்ற ஆண்டே வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தற்போது புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை என்பது படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர் பயிற்சி முடித்த மற்றும் பல்வேறு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள அனைவருடைய வாழ்க்கையும் இந்த ஆட்சியில் கேள்விக்குறியே....

    ReplyDelete
  5. Sir PTA moolam temprary teaching staffnu potangale athuku innum one month salary kuuda podala sir appointment potathe three month ku than athu ippadi❄📌📌📌

    ReplyDelete
    Replies
    1. neenga antha velaikku ponathe ungal vazhkkaiyody vilaiyadathaan parthukondiruntha velaium ponathu ungalin nimmathium tholainthathu...ethuthan ungalukku kidaitha uthiyam...

      Delete
  6. மாண்புமிகு முதல்வர்அவர்கள் தனி கவனம் செலுத்தி மே மாதம் ஊதியம் வழங்க பரிந்துரைக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. naam yennadhan kettalum sevedar kaathil sangu oothuvathupolathan...

      Delete
  7. Government public library daily wages paniyalargaluku April and may month salary innum vazhangapada villai,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி