ஓய்வு வயது உயர்த்தியது ஏன்? யாருக்கு பொருந்தும், யாருக்கு பொருந்தாது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2020

ஓய்வு வயது உயர்த்தியது ஏன்? யாருக்கு பொருந்தும், யாருக்கு பொருந்தாது?


தமிழகத்து ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் , அலுவலர்கள் நிரந்தரப் பணி இடத்தில் இருப்பவர்களுக்கு ஓராண்டு ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக நீட்டித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள் .

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணை எண் 51 நாள் 07 . 05 . 2020 ன்படி வெளியிடப் பட்டுள்ளது .

யார் யாருக்கு எப்போது இருந்து பொருந்தும் : நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள் அலுவலர்கள் , ஆசிரியர்கள் , பணியாளர்கள் , ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு பொருந்தும் . 02 . 05 . 2020 முதல் பிறந்த தேதி உடையவர்கள் அனைவருக்கும் பணி நீட்டிப்பு உண்டு . அரசாணையில் 31 . 05 . 2020 முதல் என்று குறிப்பிடப்பட்டிருப்பது அந்த மாதத்தின் இறுதி நாளை குறிப்பிட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .

முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினைப் பெற்றுள்ளதா ?

 எந்த அறிவிப்பினையும் வெளியிடாத முதலமைச்சர் அவர்கள் இந்த அறிவிப்பினையாவது வெளியிட்டுள்ளார் . வரவேற்பு பயனாளிகளின் மனநிலையை பொறுத்ததாக அமையும் .

29 ஆண்டு காலம் பணியாற்றியவர்கள் இன்னும் ஓராண்டு காலம் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கிற போது அவர்கள் 30 ஆண்டு முடிக்கும் போது முழு ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள் .

தேர்வுநிலை , சிறப்புநிலை பெறுபவர்கள் ஓராண்டு பணி நீடிப்பதால் அந்த நிலையினை பெறும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் . புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் இன்னும் ஓராண்டு காலம் பணியாற்ற
இந்த அறிவிப்பு உடன் வெளி வருவதற்கான காரணம் என்ன ?

 ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகின்ற அதிருப்திக்கு தீர்வு காணும் முயற்சியாக கூட இருக்கலாம் . ஒரே சமயத்தில் இந்த ஆண்டு பணி நிறைவு பெறுபவர்களுடைய முழு ஓய்வூதிய பணப் பயன்களை அனுமதிப்பதற்கான நிதி ஆதாரம் அரசிடம் பற்றாக்குறை உள்ளது என்பதையும் மறுப்பதற்கு இயலாது . அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவதற்குள் நிதிப்பற்றாக்குறையினை தீர்வு கண்டு விட முடியுமா ? என்ற கேள்வியும் எழாமலில்லை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

ஏப்ரல் மாதம் பணி நிறைவு பெற்றவர்கள் மனநிறைவுடன் முழு ஓய்வூதிய பயன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் விடை பெறுவதாக நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் . வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் கொந்தளிப்பின் உச்சக் கட்டத்திற்கு செல்வதை தடுத்து நிறுத்த முடியாது .

95 லட்சம் பேர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து வயது முதிர்வும் நிறைவு பெறுகிற வரையில் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டு வருகிறார்கள் . ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் , தேர்ச்சி பெறாதவர்கள் , தேர்வு எழுத தயார் படுத்திக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கானோர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறுக்க தான் முடியுமா ?

 கல்லூரி , பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களைத் தவிர தமிழகத்தில் எந்த ஆசிரியர் சங்கங்களும் ஓய்வு பெறும் வயதை எங்களுக்கு நீட்டித்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடியதாக வரலாற்றில் இடம் பெறவில்லை .

30. 4 - 2020 வரை ஓய்வு பெற்றவர்கள் மற்றும் 30 . 4 . 2020க்கு முன் ஓய்வு பெற்று 3 1 - 5 - 2020 வரை பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது எனத் தெரிகிறது . அதாவது 2 - 5 - 2020க்கு பிறகு ஓய்வு பெறவுள்ளவர்களுக்கு முழுமையாக ஓராண்டு கிடைக்கும் .

1 - 6 - 2020 க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு இரண்டாண்டுகள் கிடைக்கும் அதாவது பணி நீட்டிப்பில் 60 வயது வரை பணி புரியலாம் ) அத்துடன் ப்ரோமோசன் உள்ளிட்டவை சிலருக்கு தாமதம் ஏற்படலாம் . ஏனெனில் ஒருவர் ஓய்வு பெற்றால் மட்டுமே இன்னொருவர் அந்த இடத்திற்கு வரமுடியும் என்பதால் இது ப்ரோமோசனை சிலருக்கு பாதிக்கலாம் . எனினும் 58 வயதில் இருந்து 59 வயதாக ஒய்வு பெறும் வயதை அதிகரித்து இருப்பது தமிழக அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . 

8 comments:

  1. 25 வருடம் பணி நிறைவு செய்தவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. இல்லை தோழரே,
      30 ஆண்டுகள் பணி புரிந்தவர்
      ஓய்வு வழங்க முன்வந்தால்
      சுமார்
      20,000 அரசு பணியாளர்களின்
      பணிஇடங்கள் இளைஞர் களுக்கு
      கிடைக்கும்...
      தற்போது எல்லாம் டிகிரி முடித்துவிட்டு லோயர் கிரே பணிக்கு சேர்பவர், தம்
      25 ஆண்டு service இல் தன் தம் த்குதிக்கு உரிய பதவியை பெறுகிறார், அவர் பாவம்
      30 ஆண்டுக்கு மேல் 38,39,40
      ஆண்டுக வரை பணி புரிபவர்கள்???

      Delete
  2. அர‌சு ஊழிய‌ர்க‌ள் சுய‌ந‌ல‌மில்லாம‌ல் சிந்திக்க‌ வேண்டும்...இந்த‌ அர‌சாணையை நிச்ச‌ய‌ம் இர‌த்து செய்ய‌ வேண்டும்..இளைஞ‌ர்க‌ள் தொட‌ர்ந்து குர‌ல் கொடுக்க‌ வேண்டும்..58 வ‌ய‌து அல்ல‌து 28 வ‌ருட‌ ப‌ணி நிறைவு செய்திருந்தால் அவ‌ர்க‌ளாக‌வே விருப்ப‌ ஓய்வு பெற‌லாம்..அல்ல‌து அர‌சே க‌ட்டாய‌ ஓய்வு அளிக்க‌லாம்..ஓய்வு பெற்றால் வ‌ழ‌ங்கும் தொகையைத் த‌விர்க்க‌வே அர‌சு இந்த‌ த‌வ‌றான‌ முடிவை எடுத்துள்ள‌து..தொகையை த‌வ‌ணைக‌ளாக‌ கூட‌ வ‌ழ‌ங்க‌லாம்..ஜாக்டோ ஜியோ வின் கோரிக்கை நியாய‌ம‌ன‌தே..

    ReplyDelete
  3. அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இனி நீ பேசி ஏதாவது ஆகுமா

    ReplyDelete
  4. Naanum teacher thaan... Nan job vaanga rompa kastappattiruka. But 58 change pannak koodathu. Ithu paavam....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி