அறிவியல் உண்மை - மாவட்ட.திற்கு மாவட்டம் வெப்பநிலை வேறுபடுவதேன் ? உலகின் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான வெப்பநிலை நிலவுவதில்லையே ஏன்? - kalviseithi

May 8, 2020

அறிவியல் உண்மை - மாவட்ட.திற்கு மாவட்டம் வெப்பநிலை வேறுபடுவதேன் ? உலகின் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான வெப்பநிலை நிலவுவதில்லையே ஏன்?


சூரியனிடமிருந்து பூமி வெப்பத்தைப் பெறுகிறது. அதிக வெப்பம் பெறும் இடங்களில் வெப்பநிலை அதிகமாகவும்,  வெப்பநிலை குறைவாகவும் இருக்கும். சூரியனிடமிருந்து பூமி வெகு தொலைவில் இருப்பதால் சூரியனின் வெப்பக் கதிர்கள் ஒன்றுக்கொன்று இணையாக வந்து பூமியில் விழுகின்றன.

பூமி உருண்டை ஆதலால் , நில நடுக்கோட்டுப் பகுதியில் அதிகக் கதிர்களும் துருவங்களில் குறைவான கதிர்களும் விழுகின்றன. இதனால் , துருவங்களில் வெப்ப நிலை குறைவாகவும் , நிலநடுக்கோட்டில் வெப்பநிலை அதிகமாகவும் இருக்கும் . மேலும் , பூமியைச் சூழ்ந்து இருக்கும் காற்று மண்டலத்தின் சலனத்தாலும் காற்றில் கலந்துள்ள வளிமப் பொருள்களின் தன்மையாலும் பூமியின் வெவ்வேறு பகுதிகளில் சென்றடையும் சூரிய ஆற்றலின் அளவு வேறுபடுகிறது . காற்றிலுள்ள சில வளிமங்கள் ஒளிசக்தியை வெப்ப சக்தியாக மாற்றுகின்றன.

சில வளிமங்கள் பூமிக்கு வந்த வெப்பத்தைத் தப்பிச் செல்லாதவாறு தடுக்கின்றன ; நீராவியானது குளிர்ந்த மழையாகப் பெய்து வெப்பத்தைத் தணிக்கிறது. காற்று வீசுவதால் வெப்பம் கடத்தப்படுகிறது. ஆக , பூமி உருண்டையாக இருப்பதாலும் , சூரியனின் கதிர்கள் சில இடங்களில் செங்குத்தாகவும் வேறு சில இடங்களில் சாய்வாக விழுவதாலும் , பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் பல நிகழ்வுகளாலும் பூமியின் வெப்ப நிலை இடத்துக்கு இடம் , நேரத்திற்கு நேரம் மாறுபடுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி