பள்ளி பாடப் புத்தகத்தில்'கொரோனா' வைரஸ் பற்றிய பாடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2020

பள்ளி பாடப் புத்தகத்தில்'கொரோனா' வைரஸ் பற்றிய பாடம்


கொரோனா வைரஸ் குறித்த பாடம், வரும் கல்வி ஆண்டில், பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட உள்ளது.கொரோனா வைரஸ் குறித்து, தற்போதைய மாணவர்களும், வருங்காலசந்ததியினரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக, பள்ளி பாடப் புத்தங்களில், இது குறித்த பாடம் சேர்க்கப்பட உள்ளது.

தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையில், சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்திலும், ஆறு முதல், 10 வரை, அறிவியல் பாடத்திலும், கொரோனா வைரஸ் பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், கொரோனா வைரஸ் பாடம் இடம்பெற உள்ளது. நுண் உயிரியல்,ஊட்டச்சத்து மற்றும் உணவு பதப்படுத்துதல், நுண் வேதியியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில், கொரோனா பாடங்கள் இணைக்கப்பட உள்ளன.

கொரோனா வைரஸின் துவக்கம், அதன் வடிவம், அதில் இடம்பெற்றுள்ள புரத செல்களின் தன்மை, மிருகங்களிடம் பரவிய வைரஸ், மனிதனுக்கு பரவிய முறை, அதனால், மனிதர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு போன்ற அம்சங்கள், பாடங்களில் இடம்பெறும்.

இதற்காக, உயிரியல் பிரிவு ஆசிரியர்கள், கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை திரட்டி வருவதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி