பொது முடக்க காலத்தில் மாணவர் சேர்க்கை உள்ப ட அரசு அறிவிக்காத நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொண்டால், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்ப டும் எனபள்ளிக் கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பொது முடக்கம் மே31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த காலக்கட்டத்தில், சில அடிப்படைபணி களை மட்டும் மேற்கொள்ள அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தி கொள்ளலாம். அதேபோன்றுதேவையான சில பணிகளை ஆன்லைனில் மேற் கொள்ளலாம். அதற்கு மாறாக, பள்ளிகளைத் திறந்து வேறு எந்த நடவ டிக்கையிலும் ஈடுபடக் கூடாது.
இந்தநிலையில், மாணவர் சேர்க்கையை நடத்துதல், கட்டணம் வசூ லித்தல் உள்ளிட்ட பணிகளை சில தனியார் பள்ளிகள் மேற்கொண் டுள்ளன. பெற்றோரைப் பள்ளிக்கு வரவழைத்து, அவர்களிடம் விண் ணட்டங்களையும் பெறுகின்றன. அதேபோன்று மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்துகின்றன.இது குறித்து, புகார்கள் வந்த பள்ளிகள், சுகாதா ரத் துறைமற்றும் உள்ளாட்சி அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட் டுள்ளன.
இந்தநிலையில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலமாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் கரோனா பொது முடக்க காலத்தில் அரசு அறிவிக்காத பணி களை, பள்ளிகள் மேற்கொள்ளக்கூடாது. மாணவர்கள் மற்றும் பெற்றோரை பள்ளிக்கு வரவழைப்பதுகூடாது. உத்தரவை மீறும் பள்ளிகள் மீது தொற்று நோய் பரவல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி