வெளிநாட்டு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., தேர்வு ரத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2020

வெளிநாட்டு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., தேர்வு ரத்து


'வெளிநாடுகளில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வை நடத்தாமல், தேர்ச்சி நிர்ணயிக்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால், பள்ளி, கல்லுாரிகளின் தேர்வுகள்பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெளிநாடுகளில் செயல்படும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக, வெளியிடப் பட்டுள்ள புதிய சுற்றறிக்கை: சர்வதேச அளவில், 25 நாடுகளில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும், பல்வேறு கால அவகாசம் நிர்ணயித்து, ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த சூழலில், ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியாக, ஒவ்வொருகால கட்டத்தில், பொதுத் தேர்வுகளை நடத்த முடியாது. அந்த நாடுகளுக்கு வினாத்தாள் அனுப்புவது, விடைத்தாள்களை எடுத்து வந்து திருத்தம் செய்து, தேர்வு முடிவை அறிவிப்பது இயலாத காரியம். எனவே, வெளிநாடுகளில் உள்ள மாணவர்களுக்கு, இதுவரை முடிந்த தேர்வுகளை தவிர, இந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு எந்த தேர்வும் நடத்தபோவதில்லை.

மாறாக, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தேர்வுகள், கற்றல், கற்பித்தல் அளவீடுகள் அடிப்படையில், தேர்வு முடிவை அறிவிக்க உள்ளோம். இதற்கான வழிமுறைகள் தயாரானதும் அறிவிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. In Tamilnadu also they can announce all pass and give the 10th students grade.We cannot play with the children life.Because every year the result percentage s increasing.So due to natural disaster this year let all the children can get pass.This is a post from teacher cum parent.They will use the remaining days to study for 11th portion.

    ReplyDelete
  2. Tamilnadu state board can take X all pass decision.Now the children are not concentrating their studies.They are fear about Corona and way to escape from hungry.Many children and parent are not able to eat one time full diet. What they had in one day is shared for 3 times. Children with hungry and fear can't concentrate with studies. So the students standard can determined using Quaterly, Half yearly (marks are in EMIS),I & II Revision tests.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி