கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 62 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31ம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கிடையே, கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாணவா்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிக் கல்வித் துறையின் வழக்கமான கால அட்டவணையின்படி , கோடைக் கால விடுமுறைக்கு பிறகு, பள்ளிகளை ஜூன் 1-ஆம் தேதி திறக்க வேண்டும். ஆனால், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் தற்போதுள்ள சூழலில், பள்ளிகள் திறக்கப்படும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் எப்போது பள்ளிகளை திறக்கலாம், திறந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன, 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை முடிப்பது என்பது குறித்து சென்னை தலைமைசெயலகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி உள்ளார்.
சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Please cinsider6 th to 8th also leave to students. They also don' follow rules.only 9th 10th. 11th 12th
ReplyDeleteTeachers from red zone should not be allowed to teach the students in rural areas,,particularly Chennai, kanchipuram,thiruvalluvar .They should be allowed to teach in their district
ReplyDeleteRed zone teachers should teach in their district itself,they should not spread the disease to teachers and students
ReplyDeleteஜூலை முதல் வாரத்திலேயே அனைவருக்கும் வகுப்புகள் தொடங்கலாம்
ReplyDeleteஜூலை முதல் வாரத்திலேயே அனைவருக்கும் வகுப்புகள் தொடங்கலாம்
ReplyDeleteThink of private school teachers. They will be rendered jobless till Aug/Sep and without salary.
ReplyDeleteஒன்பதாம் வகுப்ப முதல்12ஆம் வகுப்பு வரை ஜூலை மாதம் தொடங்கி அதன் பிறகு ஆகஸ்டுமாதம் இரண்டாவது வாரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கலாம்
ReplyDeleteஒன்பதாம் வகுப்ப முதல்12ஆம் வகுப்பு வரை ஜூலை மாதம் தொடங்கி அதன் பிறகு ஆகஸ்டுமாதம் இரண்டாவது வாரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கலாம்
ReplyDeleteஉயர்நிலைப்பள்ளிகள் சூலை இரண்டாம் வாரத்திலும்,துவக்கப்ப்பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்திலும் துவங்கலாம்.
ReplyDeleteஉனக்கு என்ன பிரச்சனை
Deleteமாணவர்களின் உயிர் மிக முக்கியம். அவர்களின் உயிரை பணயம் வைத்து பணம் சம்பாதிக்க வேண்டாம். நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தபின் இறுதியாக திறந்தால் நலம். இல்லையென்றால் பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் , மர்ம காய்ச்சலினால் கொத்தாக மரணங்களை பார்க்க வேண்டிய சூழல் வரும். சத்தான உணவு இல்லாமல் இலட்சக்கணக்கான மாணவர்கள் இங்கு வாழ்கின்றனர் இதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ReplyDeletePrivate school teachers ku august varaikum salary illa kudukara 5000 m pochu
ReplyDeleteEtho monthly oru 2000 Kudutha nalla irukum for private school teachers ku
This is only happy news for goverment teacher not for private teachers
Students only important. Not money.
DeleteNan student important ila nu sollave illaye private teachers problem pathi mattum thana sonnen
Deleteprivate school teachers are very concerned with the welfare of the students then they have to oppose school management to adhere government rules (10 hours of school special classes) private school teachers should avoid corporal punishment harassment against students for result is it possible
ReplyDeleteமாற்றம் ஒன்றே மாறாதது!
ReplyDeleteமருத்துவ வல்லுனர்களின் வழிகாட்டுதலின்படி எப்போது பள்ளிதிறக்க வாய்ப்புள்ளதோ அப்பொழுது பள்ளிகள் திறந்து நோய்தொற்றில்லாமல் பள்ளிக்குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் நலம் பாதுகாப்பது முக்கியம்! காலாண்டுத்தேர்வில்லாமல், அரையாண்டுத்தேர்வு பாடங்களுக்கும், ஆண்டுத்தேர்வு பாடங்களையும் மட்டுமே இந்த ஆண்டு நடத்திட தமிழக அரசு முடிவு செய்திடல் வேண்டும்!