புதிய ஆசிரியர்கள் நியமனம் மற்றும் இட மாறுதல் கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை! - kalviseithi

May 23, 2020

புதிய ஆசிரியர்கள் நியமனம் மற்றும் இட மாறுதல் கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை!


'இடமாறுதல் கவுன்சிலிங்கை, உடனே நடத்த வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒவ்வோர் ஆண்டும், ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சிலிங், கல்வி ஆண்டின் துவக்கத்தில் நடக்கும். அதற்கான வழிமுறைகள், ஏப்ரல், மே மாதங்களில் வெளியாகும். இந்த ஆண்டு, பள்ளிகள் திறப்பு தள்ளிப் போயிருப்பதால், இன்னும் கவுன்சிலிங் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில்,

இட மாறுதல் கவுன்சிலிங்கை நடத்தக் கோரி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர், ஆரோக்கியதாஸ், பள்ளி கல்வி துறைக்கு அனுப்பியுள்ள கடிதம்:

தமிழக அரசு வெளியிட்ட செலவினங்களுக்கான கட்டுப்பாடுகளில், பொது மாறுதல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, கூறப்பட்டுள்ளது.பள்ளி கல்வி துறையை பொறுத்தவரை, ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

கவுன்சிலிங்கில் மாறுதல் பெறும் ஆசிரியர்களுக்கு, எந்த செலவினமும், பயணப்படியும், அரசால் வழங்கப்படுவது இல்லை. எனவே, அரசு வெளியிட்ட செலவினங்களுக்கான கட்டுப்பாடு அரசாணையால், பள்ளி கல்வித்துறை இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்துவதில், எந்த பிரச்னையும் இருக்காது. தமிழக அரசுக்கு, எந்த நிதி இழப்பும் ஏற்படாது.எனவே, கவுன்சிலிங் வழியாக, ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியிடங்களுக்கு நேரடி நியமனம் வழியாக, புதிய ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

35 comments:

 1. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு இடமாறுதல் பெற்றும் ஈராசிரியர் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் தாய்ப்பள்ளியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அவர்கள் எப்பொழுது பணியிட மாறுதல் பெற்ற பள்ளிக்கு விடுவிக்கப்படுவார்கள் என்ற தகவல் தெரிவிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. நாடு எந்த நிலையில் இருந்தாலும் சரி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தனது தேவை மற்றும் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குவது மட்டுமே நினைப்பாக உள்ளது.

   Delete
  2. டேய் தம்பி இது உனக்கு தேவையா ?

   Delete
  3. Mr.unknown.....that level only you are.

   Delete
  4. Mr.unknown நாங்கள் சம்பளம் வரவில்லையே என்று பதிவிடவில்லை. வேலைக்கு செல்ல முடியவில்லை என்று தான் பதிவிட்டிருக்கிறேன். அந்த அளவிற்கு கூட புரிதல் அற்ற நீங்கள் திறமையை பயன்படுத்தி அரசு வேலைக்கு செல்லுங்கள்.

   Delete
  5. Tell about reliving information for 2019 - 2020. Teacher transfer counseling.

   Delete
  6. ஆசிரியர் வேலை என்பது சாதாரண வேலை இல்லை
   அவர்கள் இல்லையென்றால் நாம் பகிர்ந்து கொள்ளும் செய்திகளை கூட
   படித்திருக்கயிலாது
   ஆசிரியர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள்.

   Delete
 2. Pls conduct teachers counselling..

  ReplyDelete
  Replies
  1. இவர்கள் நியமித்த பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிய இந்த அரசு இதையாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி அரைநாள் மட்டும் வேலை அதுவும் வாரத்தில் 3 நாள் மட்டும் வேலை என்று எந்த வகையிலும் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியாத வகையில் நியமனம் செய்த இவர்களுக்கே இந்த புண்ணியம் சேரும். தற்போது இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே ஏற்படுத்தவில்லை இந்த அரசு. இதில் 58 வயது என்பதை 59 ஆக ஓய்வு வயது மாற்றப்பட்டு இளைஞர்களின் கனவில் மண்ணை இந்த அரசு அள்ளிப் போட்டிருக்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் சென்ற ஆண்டே வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தற்போது புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை என்பது படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர் பயிற்சி முடித்த மற்றும் பல்வேறு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள அனைவருடைய வாழ்க்கையும் இந்த ஆட்சியில் கேள்விக்குறியே.... TET பாஸ் பண்ணவேண்டும். ஆனால் வேலை கிடையாது. எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து பாஸ் ஆகி கடைசியில் வேலையும் போடுவதில்லை. ஏற்கனவே வேலைவாய்பு்பு போடுவதில்லை என்று பணியிடங்களை குறைத்தார்கள். தற்போது மேற்சொன்ன காரணங்களால் படித்தவர்கள் நடுத்தெருவிற்கு வருவது தான் இந்த ஆட்சியில் நடக்கிறது.

   Delete
  2. தாங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுக்கு அரசிடம் பதில் வந்தால் நலம்.

   Delete
 3. Teachers post pannunga pallarin valkayil oli ettravum

  ReplyDelete
  Replies
  1. Arul sir neeenga entha batch Tet pass panninga. Ur number.

   Delete
  2. Hai , I also cleared TET paper 1 in 2017 .

   Delete
 4. புதிய ஆசிரியர் நியமனம் 2014 பிறகு நடைபறவில்லை...paper 1 வெறும் 1800 post போட்டதாக நினைக்கிறேன்...இப்பொது 3245 vacant பேப்பர்1க்கு இருக்கு.....இது மக்கள் அரசு என்றால் sgt (பேப்பர் 1 ) காலியிடத்தை நிறப்ப வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டு கொள்கிறேன்....2013பேப்பர் 1 ஆகஸ்ட் மாதம் முடியபொகுது கறுனகாட்டுங்கல்......

  ReplyDelete
  Replies
  1. 2017 19 ku Oru posting kuda podalaiye nanba...

   Delete
  2. Sir, TET சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியில் இருந்து 7 ஆண்டுகள் Valid, so 2021 வரை Valid உண்டு. சான்றிதழை பாருங்கள். Don't worry...

   Delete
 5. Tet pass panniyavarkalukku consoliditate sly post podunga vala vazhi seyyungal

  ReplyDelete
  Replies
  1. என்ன பிச்சையா கேட்கிறீர்கள்... நேர்மையாக தேர்வு எழுதி காத்துக்கொண்டு இருக்கிறோம் நண்பரே...

   Delete
  2. Sir ,i also cleared Tntet paper 1,paper 2 both in 2017.Please engaluku vela podama romba kastapadothuruga .Intha pandemic situation la new competitive exam vaikirathu vida pass pannavangaluku postings poda nalla irukum.we will ever thankful to their help.I spent nearly 2 years to prepare ,but no use. Please yaravathu engaloda request government kitta kondopoi serunga ,u will get blessings from god.Kindly help the Tet cleared aspirants.

   Delete
  3. I also cleared TET paper 1 in 2017. Getting a govt teacher job is my dream,ambition and life goal. கடினமான சூழ்நிலையில் படித்து தேர்ச்சி பெற்றும் எந்த பயனும் இல்லை என்பது ஒவ்வொரு நாளும் கவலையை தருகிறது .

   Delete
 6. Tet pass pannavangalku intha yearla posting poduvangala waitpanniye7years mudithathu, ithuku thirva illaya

  ReplyDelete
 7. Hello ramji, Dont worry things will happen. TET certificate expiry will be on 21st Dec 2021. Please see your tet certificate and they mentioned that tet certificate will be valid from the date of issue.

  ReplyDelete
 8. இந்த website il நாம் குமுறி என்ன ஆகபோகிறது நண்பரே...

  ReplyDelete
 9. Vela seyyanumna private la neenga varudhu settings. Exam ku Mattum padichi vela vaangitaru apparam vela vaanga prabu vela seyya romba yosikiradhu 80 percent Teachers ketta students sari illa school sari illanu soldringa. Edhum sari illanu soldra Teachers aala sambalam sari illanu solla mudiuma? Illa pidikalanu Resign panna mudiuma?

  ReplyDelete
 10. Once teacher training was so simple and they were devoted to the service. Now the training is hard and they lost devotion.

  ReplyDelete
 11. Seekiram special teacher job kudunga sir

  ReplyDelete
 12. Hello Mr unknown are you a teacher trained?

  ReplyDelete
 13. Sir evalavu nal analum postings podora idea illa government ku simply for name shake and to collect money they are conducting tet exams .Ethuku namma kastapattu padichalum questions romba twist panni kekuranaga ennamo postings odane poora mathiri.Yaravathu engala mathiri tet pass pannavanga 2017 request ah government la convey pannuga please .Help panna unga family ye nalla irukum.please its the humble request kindly share this request to the concerned government authorities .

  ReplyDelete
 14. Sir ,i also cleared Tntet paper 1,paper 2 both in 2017.Please engaluku vela podama romba kastapadothuruga .Intha pandemic situation la new competitive exam vaikirathu vida pass pannavangaluku postings poda nalla irukum.we will ever thankful to their help.I spent nearly 2 years to prepare ,but no use. Please yaravathu engaloda request government kitta kondopoi serunga ,u will get blessings from god.Kindly help the Tet cleared aspirants.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி