அறிவியல் உண்மை - மேக மூட்டமாக இருக்கும்போது வியர்ப்பது ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2020

அறிவியல் உண்மை - மேக மூட்டமாக இருக்கும்போது வியர்ப்பது ஏன்?


சுற்றுப்புற வெப்பநிலை உயரும்போது , நம் உடலின் வெப்பநிலையம் உயரத் தொடங்குகிறது. அப்போது உடலின் வெப்பநிலையை 98.4°f அளவில் நிலைநிறுத்துவதற்காக வியர்வை வெளிப்படுகிறது. வியர்வை ஆவியாகும்போது உடலின் வெப்பநிலை குறையும்.

காற்றிலுள்ள ஈரப்பதத்தின் அளவு , வியர்வை ஆவியாகும் வேகத்தைப் பாதிக்கிறது. ஈரப்பதம் குறைந்தால் ஆவியாகும் வேகம் கூடும். ஈரப்பதமும் சுற்றுப்புற வெப்ப நிலையும் குறைவாக இருக்கும்போது , வியர்க்காமல் இருக்கும் , அப்படியே வியர்த்தாலும் உடனே ஆவியாகிவிடுகிற வயாகிவிடுகிறது. இதனால் உடலுக்கு இதமாகவும் இருக்கிறது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ( air conditional ) அறையில் இந்த நிலை ஏற்படுகிறது. மேகமூட்டமாக இருக்கும் போது வெயில் இல்லாவிட்டாலும் வெப்பநிலையும் , ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். மேகங்களில் நீர் மூலக்கூறுகள் கதிரவனின் அகச்சிவப்புக் கதிர்களை பெருமளவில் உட்கவர்ந்து காற்றின் வெப்பநிலையையும் உயர்த்துகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி