கல்லுாரி சேர்க்கைக்கு நுழைவு தேர்வு இல்லை - யுஜிசி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2020

கல்லுாரி சேர்க்கைக்கு நுழைவு தேர்வு இல்லை - யுஜிசி அறிவிப்பு.


கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., நிராகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் தாமதமாகியுள்ள பல்கலை, கல்லுாரி தேர்வுகள், புதிய மாணவர் சேர்க்கை குறித்து ஆராய, ஹரியானா மத்திய பல்கலையின் துணைவேந்தர், குகாத் தலைமையிலான குழுவை, மத்திய அரசு அமைத்தது.இந்த குழுவினர், பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, யு.ஜி.சி.,யிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்து, புதிய கல்வி ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையை, யு.ஜி.சி., நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.அதில், பிளஸ் 2 முடித்தோருக்கு நுழைவு தேர்வு நடத்தி, இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்க வேண்டும் என, நிபுணர் குழு பரிந்துரைத்தது.இந்த பரிந்துரையை நிராகரித்த, யு.ஜி.சி., 'முந்தைய ஆண்டுகளை போல், இளநிலை பட்ட படிப்பில் மாணவர்களை சேர்க்கலாம்' என, அறிவித்துள்ளது.

ஏற்கனவே, மூன்று ஆண்டுகளுக்கு முன், இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்த பரிந்துரையை, இதுவரை செயல்படுத்த முடியவில்லை.

1 comment:

  1. First implement neet for engineering admissions.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி