ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டாலும் தற்போது கொரோனா வேகமெடுத்து வருவதால் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள் என்று 92 சதவீத பெற்றோர் நாடு முழுவதும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 54 சதவீத பெற்றோர் அதில் உறுதியாக உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்படுள்ளதால் பொதுமக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது எந்த அளவுக்கு பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து பேரண்ட் சர்க்கிள் என்ற தனியார் அமைப்பு ஒன்று இந்தியாவில் பெரிய நகரங்களில் ஆய்வு நடத்தியுள்ளது. அது தொடர்பான முடிவுகளை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி நாடு முழுவதும் 92 சதவீத பெற்றோர் தங்கள் குழந்தைகளை திரும்பவும் பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுவதாக தெரியவருகிறது. அதேபோல சென்னையில் நடத்திய ஆய்வில் 54 சதவீத பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் மொத்தம் 12 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆய்வில் பள்ளிகள், மற்ற குழந்தைகளுடனான விளையாட்டு, பிறந்தநாள் விருந்து, மால்கள், சினிமா, உணவகங்களுக்கு செல்வது, சிறப்பு வகுப்புகளுக்கு செல்வது, விளையாட்டு தொடர்புடைய உடற்பயிற்சி, பொதுப்போக்குவரத்து, கோடை விடுமுறை, ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒட்டுமொத்த சர்வே நடத்தப்பட்டது.
இந்த சர்வேயில் பங்கேற்றவர்களின் பதில்களில் கொரோனா அச்சம் பெற்றோர் மத்தியில் இன்னும் இருக்கிறது என்று தெரிகிறது. இது உடனடியாக நீங்க வாய்ப்பில்லை. கற்பித்தலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டபோதிலும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயாராக இல்லை.
வைரஸ் தாக்கம் முற்றிலும் கட்டுக்குள் வந்த பிறகே பள்ளிக்கு அனுப்புவது சரியாக இருக்கும் என்று பெற்றோர் கூறுகின்றனர். பள்ளிகள் திறந்த பிறகு ஒரு மாத சூழ்நிலையை நன்கு ஆய்வு செய்த பிறகே பள்ளிக்கு அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று 56 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஆனால் 8 சதவீத பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக இருக்கின்றனர்.
கொரோனா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில் .. அதன் பாதிப்புகள் நாள்தோறும் அதிகரிப்பதை காண்கிறோம்.இவ்வாரிருக்க ஜுன் இறுதியில் தேர்வு என அறித்த பின்பு இன்னும் 15 தினங்களில் தேர்வு என்பது அவசர கால அறிவிப்பு என்றே தோன்றுகிறது.
ReplyDelete1.தேர்வுக்கு முன்பு கொரோனா குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பி விடுமா?
2. மாணவர்கள் பயமின்றி தேர்வெழுதுவார்களா?
3. தேர்வெழுதும் யாவருக்கும் கொரோனா இல்லையா? தேர்வு நாட்களில் பரவாதா? இதை உறுதிப்படுத்த இயலுமா?
4. பேருந்தில் பயணம் செய்து தேர்வெழுதும் மாணவர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உள்ளதா?
5.ஒரு மாணவருக்கு இருந்து ..பரவினால் அது, பிறமாணவர் மட்டுமின்றி , பெற்றோர், பின்பு ஊர்மக்கள் என எங்கும் பரவிடுமே.
6. பள்ளி, தேர்வறைகள் , ஆசிரியர்கள் என இடைவெளி இன்றி தொடர்பு இருந்தால்தான் பயமின்றி தேர்வெழுத முடியும்.
7. எல்லாவற்றுக்கும் மேல் பெற்றோர்கள் பயந்து குழந்தைகளை தேர்வுக்கு அனுப்ப வில்லையெனில் எல்லாமும் வீண்.
8. கவனிக்குமா இந்த அரசு என்பதே இப்போதைய பெற்றோர்களின் கவலை.
பள்ளி திறந்து பின் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து மீளக்கற்ற பிறகு தேர்வு எழுதினால் சிறப்பாக அமையும். இல்லையெனில் மாணவர்களிடம் தேர்வு ஒரு விரக்தியாகவே முடியும்...
ReplyDeleteஎந்த வித முன் யோசனையும் இன்றி திடீர் திடீர் என எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் யாருக்காக எடுக்கப்படுகிறதோ அவர்களுக்கு அது பாதகமாகவே முடியும் எனவே சாதக பாதகங்களை மனதில் கொண்டு முடிவு எடுக்கவேண்டும் அது மட்டுமின்றி தேர்வு எப்பொழுது வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளாலாம் ஆனால் மனித உயிர் போனால் வராது இது தான் நிதர்சனமான உண்மை மேலும் மற்ற மாநிலங்களில் தேர்வு குறித்து எந்தவித அட்டவணையும் இதுவரை வெளிவரவேயில்லை காரணம் கரோனாவின் தாக்கம் குறைந்தாலும் அவர்கள் தேர்வுகள் பற்றி ஆலோசித்தும் சிந்தித்தும் கொண்டுதான் உள்ளார்கள் ஏன் என்றால் மனித உயிர்கள் விலைமதிக்கமுடியாதது அதுபோல தேர்வுகள் குறித்தும் பள்ளிகள் திறப்பு குறித்தும் நமது நன்கு யோசித்து நல்ல முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ReplyDeleteஎன் குழந்தை சென்னையில் படித்தால் அதனால் சென்னையில் தேர்வு எழுத வேண்டும்.நாங்கள் சொந்த ஊர் தஞ்சையில் இருக்கிறோம்.சென்னை எப்படி செல்வது என்று தெரியவில்லை.
ReplyDeleteகோயம்பேடு சந்தையின் சலசலப்பு ஓயும்முன் அடுத்தகட்ட தேர்வர்கள் ரெடி கோவிட்19 கேரியராக செயல்பட தொடருங்கள் யாரோ பலிகடா???
ReplyDeleteஏன் சுழற்சி முறையில் அந்த அந்த ஊரின் பள்ளி மற்றும் சமுதாயக்கூடங்களில் online exams conduct பண்ணலாமே Choose the best answer மட்டும் போதுமே.
எந்த வித முன் யோசனையும் இன்றி திடீர் திடீர் என எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் யாருக்காக எடுக்கப்படுகிறதோ அவர்களுக்கு அது பாதகமாகவே முடியும் எனவே சாதக பாதகங்களை மனதில் கொண்டு முடிவு எடுக்கவேண்டும் அது மட்டுமின்றி தேர்வு எப்பொழுது வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளாலாம் ஆனால் மனித உயிர் போனால் வராது இது தான் நிதர்சனமான உண்மை மேலும் மற்ற மாநிலங்களில் தேர்வு குறித்து எந்தவித அட்டவணையும் இதுவரை வெளிவரவேயில்லை காரணம் கரோனாவின் தாக்கம் குறைந்தாலும் அவர்கள் தேர்வுகள் பற்றி ஆலோசித்தும் சிந்தித்தும் கொண்டுதான் உள்ளார்கள் ஏன் என்றால் மனித உயிர்கள் விலைமதிக்கமுடியாதது அதுபோல தேர்வுகள் குறித்தும் பள்ளிகள் திறப்பு குறித்தும் நமது நன்கு யோசித்து நல்ல முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ReplyDeleteDaily chemistry Trb. Teacher podunganda.....
ReplyDelete