ஊரடங்கு காலத்தில் விடைத்தாள் திருத்தும் பணியா?- புறக்கணிக்கப்போவதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு! - kalviseithi

May 23, 2020

ஊரடங்கு காலத்தில் விடைத்தாள் திருத்தும் பணியா?- புறக்கணிக்கப்போவதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு!


பாதிப்பைத் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கும்போது விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள ஆசிரியர்களைப் பணிக்க கூடாது. அவ்வாறு செய்தால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க போவதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதன் மாநில பொதுசெயலாளர் ப.மனோகரன் வெளியிட்ட அறிக்கை:
கரோனா பரவல் தீவிரம் காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. இப்போதுள்ள நிலையில் மே 31- ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது இத்தோடு நிற்குமா அல்லது இன்னும் தொடருமா என்பது யாருக்கும் தெரியாது. அரசு இதுவரை எந்த ஒரு முடிவும் தெளிவாக எடுத்ததில்லை. நாளுக்கு ஒரு முடிவை அறிவித்து, ஆசிரியர்களையும், மாணவர்களையும், பெற்றோரையும் குழப்பத்தில் வைத்துள்ளது.

பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட எந்த ஓர் அடிப்படை வசதிகளும் முழுவீச்சில் இல்லாத நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி மே 27 ல் தொடங்கும் என அரசு அறிவித்ததுள்ளது. பல ஆசிரியர்கள் வெளியூர்களிலும், மாவட்டம் விட்டு மாவட்டத்திலும், வெளி மாநிலங்களிலும் இருந்து வருகின்றனர்.

கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களும் மே 26 ம் தேதி பள்ளிக்கு வந்தாக வேண்டும். மேலும் மே 27 ல் அனைத்து ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என அரசு ஆணை வெளியிட்டு உள்ளது. எந்த போக்குவரத்தும் இல்லாத நிலையில், எப்படி பள்ளிக்கு வருவது.

எப்படி விடைத்தாள் திருத்தும்
பணிக்குச் செல்வது.இதற்கிடையில்  பாதிக்கு மேலான ஆசிரியர்கள் பெண்கள். தங்கள் குழந்தைகளை யாருடைய பராமரிப்பிலும் விட்டு வரமுடியாத சூழ்நிலை. இதைப் பற்றி சற்றும் யோசிக்காத கல்வித்துறை, இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது ஆசிரியர்களை மிகுந்த அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கி இருக்கிறது.

கரோனா அச்சம் மேலோங்கிய நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி செய்வது ஆபத்தானது. விடைத்தாள்களை பலரும் கையாள வேண்டிய நிலை உள்ளது. கரோனா வைரஸ் காகிதத்தில் 3 முதல் 4 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கும் தன்மை கொண்டது. இதனால் தொற்று பலருக்கும் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புள்ளது.

இந்த அச்சத்தோடு நுட்பமான பணியான விடைத்தாள் திருத்தும் பணியை எவ்வாறு மேற்கொள்ளுவது. கவனம் சிதையாமல் செய்ய வேண்டிய பணி. மாணவர்கள் எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கும் முக்கியான பணி. இதில் கிடைக்கும் மதிப்பெண் அடுத்த கட்ட கல்விக்கு முக்கியம்.

விடைத்தாள் திருத்தும் செயலில் சிறிதளவு மதிப்பெண் வேறுபாடு வந்தாலும்,அதிகாரிகள் முன்பு கைகட்டி பதில் சொல்லவேண்டிய பொறுப்பு, ஆசிரியர்களுக்கு. அத்தோடு சென்னைக்கு அழைத்து விசாரணை மேற்கொள்வதும், தண்டனை வழங்குதும் ஆண்டு தோறும் தொடர்கிறது. இவ்வளவு பொறுப்பான விடைத்தாள் திருத்தும் பணியை, ஊரடங்கு காலத்தில் கொரோனோ அதிகரித்து வரும் நிலையில் தொடங்குவது சற்றும் பொருத்தமற்றது.

இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
ஊரடங்கு நிறைவடைந்த பின் தொடங்க வேண்டும். மேலும், ஆசிரியர்கள் இருப்பிடத்தை கணக்கில் கொண்டு, இவ்வாண்டு மட்டும், தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ளலாம் என அனுமதி வழங்க வேண்டும். இதையெல்லாம் அரசு செய்து தராத நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணிக்கும் நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

38 comments:

 1. Every year before evaluation camp you people do like that, but if CEO asks reason and informs an action against immediately withdraw that, this type of scenario I had an experience many times, slowly they are relaxing lockdown and bringin routine life, jacto neo valzhka

  ReplyDelete
  Replies
  1. அப்படியே உங்கள் சம்பளத்தையும் புறக்களியுங்கள் பார்ப்போம்.

   Delete
  2. Veliyae seiya mattanga but getting more than 50000 per month

   Delete
  3. Mudunja thiramaiya Katti students ah puduchu Kattunga nanga ungaluku support pandrom but Enga pasangala kasu kuduthu padika vaika asaya Engaluku

   Delete
  4. Nee moodu da...avanga namakum searthu tha solunga govt employees ellarum padichu pass pannitu iniku oru job la irrukanga avanga ennikum op adikamatanga...pesa vandhuta enga area uñniya mattum parkadha selfish a..avanga ellathiyum purichu tha pandranga..

   Delete
 2. Treasury la lockdown ungalukku salary poda vara maten nu sonna eppadi irukkum. Corona doctor police cleanliness workers are working
  Matravargalukku mun mathriya irukka vendiya asiryargal ?

  ReplyDelete
 3. Bus facilities process going now today called me ceo office people they said bus routes guidelines also so teacher's don't feel government arranging bus facilities I think

  ReplyDelete
 4. vetla atikitu paduthurupa salary mattum venum but nenga veliela varamatanga ungala mariyathaya nadathura government Mela tha thappu

  ReplyDelete
 5. Lockdown la ethuku ungalukku full. salary..

  ReplyDelete
 6. ஒவ்வொரு ஆண்டும்

  தேர்வுக்கு முன்பாக போராட்டம்
  தேர்தல் பணி விலக்கு கோரி போராட்டம்
  விடைத்தாள் திருத்த மறுத்து போராட்டம்
  சம்பள உயர்வு போராட்டம்

  உங்களுக்கே வெட்கமாக இல்லையா???
  எந்த பணியும் செய்யாமல் சம்பளம் மட்டும் எதற்கு???

  கருவூலப் பணியாளர்களையும் வீட்டுலயே இருக்கச் சொல்லிடலாமா??

  காவலர்களையும், மருத்துவர்களையும் வீட்டுலயே இருக்கச் சொல்லிவிடலாமா???

  அரசின் பணி நிபந்தனைகளுக்கு உட்பட்டு தானே பணிபுரிய வந்தீர்கள்.. ?? அரசு உங்களுக்கு கடினமான பணியை கொடுப்பதாக தோன்றினால் ராஜினாமா செய்துவிட்டு எளிமையான, நோகாமல் செய்யக்கூடிய பணியாக பார்த்து சென்றுவிடலாமே...

  நீங்கள் மறுக்கும் பணியை முன்னின்று செய்துகாட்ட ஒரு இளைய பட்டாளமே காத்துக்கொண்டு இருக்கிறது.. அவர்களுக்காவது வழிவிட்டு உங்கள் வேலையை ராஜினாமா செய்யுங்கள்...
  அல்லது அரசு இதுபோன்ற ஓப்பி அடிக்கும் நபர்களை களையெடுக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. சபாஷ் சரியான கேள்வி....சொர்னயே இருக்காது....எலற்றுகும் போராட்டம்.....

   Delete
 7. மத்த துறைகள் வேலை நடக்குது உங்களுக்கு மட்டும் என்ன? கருவூலத்துறை கொரோனா வரலைனா உங்களுக்கு எப்படி சம்பளம்? அவர்களுக்கு குழந்தை இல்லையா? மனசாட்சிபடி வேலை பாருங்க.

  ReplyDelete
 8. செருப்பால் அடிக்கின்ற மாதிரி கேட்டாலும் இந்த 🐕 க்கு புத்தி வராது. இருபது வயது பெண் பிள்ளை நமது நாட்டிற்காக பணி புரிய இப்போது எங்களை எல்லாம் விட்டு காவலர் பயிற்சியை மேற்கொள்கிறது. ஆனால் இந்த ஆசிரியர்கள் உயிர் மட்டும் அவ்வளவு விலையானது போல....

  ReplyDelete
  Replies
  1. வேலையே இல்லாமல் வெட்டியாக பொழுதை போக்கி கொண்டு அடுத்தவரை குறை சொல்வதை மட்டுமே தன் தொழிலாக கொண்டு இருப்பவர்களே இது போன்ற கருத்துக்களை சொல்வார்கள் .மருத்துவர்கள் பாதுகாப்பு உடையை அணிந்து ஒரு முறை ரவுண்ட்ஸ் வந்தால் பிறகு அவர்களுக்கு சிறிது ஓய்வு. ஆனால் விடைத்தாள் திருத்தம் எவ்வளவு நுணுக்கமான வேலை. ஒரு விடைத்தாளை எத்தனை முறை புரட்ட வேண்டி உள்ளது. அது எத்தனை கை மாறுகிறது. ஒரு முறை அந்த வேலையை செய்து பாருங்கள்.அப்போது தெரியும் உங்களுக்கு. மன அமைதியோடு செய்ய வேண்டிய வேலை அது. ஆசிரியர்கள் யாரும் வேலை செய்ய மாட்டோம் என்று செல்லவில்லை. தகுந்த சூழ்நிலை வரும் வரை தள்ளி வைக்க தான் சொல்கிறார்கள்.சிபிஎஸ்இ க்கு இன்னும் தேர்வே நடத்தப்படவில்லை. ஏன் இந்த அவசரம் என்று தான் கேட்கிறார்கள்.

   Delete
  2. arasu sonna seiyanum entha mathiri nondi saakku sollakkudathu...velakkenna

   Delete
  3. Ss school la nalla ob adiparu pola. Government sonna nee seiyanum athukku thaan unakku government salary kudukkuthu...

   Delete
  4. Ss sir... காலையில் 15 பேப்பர்
   மதியம் 15 பேப்பர் திருத்துவோம்.. அரை நாளில் 15 பேப்பர் திருத்த என்னத்த கஷ்டப் பட போறோம்... கவர்மென்ட் கீ வேற கொடுக்குறாங்க...

   இதுல தனியா உழைப்பூதியம், பயணப்படி வேற தராங்க...

   பாடத்தில் புலமை உள்ள ஆசிரியர்கள் மிக மிக எளிமையா இப்பணியை செய்வாங்க....

   Delete
  5. வெளி மாவட்டத்தில் உள்ளவர்கள் 9,10 மாவட்டங்களை தாண்டி வர வேண்டி உள்ளது. வாடகை கார் முதல் மாவட்டத்துக்கும் வருவது வரை மற்றும் வந்தாலும் வெளி மாவட்ட பெண் ஆசிரியைகள் பஸ் இல்லாமல் சந்திக்க வேண்டிய பிரச்சனை பற்றி தான் அரசிடம் கூறுகிறார்கள். பஸ் விட்ட பிறகு வைத்தால் யார் என்ன சொல்ல போகிறார்கள். எங்களுக்கு உள்ள சிரமங்களை போக்க அரசிடம் எடுத்து கூறுகிறோம். உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது. நன்றாக படித்து மார்க் வாங்கி வேலையில் சேர்ந்தவர்கள் யாரும் சோம்பேரியாகவும் இருக்க மாட்டார்கள். ஓபியும் அடிக்க மாட்டார்கள். உங்களுக்கு திறமை இருந்தால் நீங்களும் படித்து ஆசிரியராக வாருங்கள். அதை விடுத்து ஏன் பொறாமை பட்டு குறை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.

   Delete
  6. Cbse papaer valuation start munnadiye start pannitanga oru paper kodutha neenga mattum than correction pannaporinga apram yenna ungaluku special bus viduranga apadi irunthum yen coorection pann matringa

   Delete
  7. Job la join pannum pothu epadi adichi pudichi vanthu serringalo athu pola ipo epadiyathu vanthu serunga Rathi Miss.

   Delete
  8. Nanum paper valuation lam Poiruken avlo Onnum kastamana we work lam illa Angayum Poi arattai adichute than paper valuation pannuvom Joly ah than irukum

   Delete
 9. செங்கலால் கட்டப்பட்ட சுவர்கள் வெயில்,மழையால் பாதிக்கபடும் போது அடியில் உள்ள அரளைக்கல் மட்டும் பாதிக்காமல் இருந்தால் எப்படி.

  ReplyDelete
  Replies
  1. என்னைக்கு வயிறு எரிச்சல் பேசக்கூடாது... அவங்க முடிவு சரியானது.....

   Delete
 10. எல்லா அரசு அலுவலகங்களும் 50சதவிகித ஊழியர்களை கொண்டு சுழற்சி முறையில் சனிக்கிழமை உட்பட நடந்து கொண்டிருக்கிறது .அவர்களும் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு வீட்டிற்கு தான் வருகிறார்கள் .அவர்கள் வீட்டிலும் குழந்தைகளும் வயோதிகர்களும் இருக்கிறார்கள் . விடைத்தாள் திருத்த இன்னும் கால தாமதம் ஏற்பட்டால் அடுத்த கல்வி ஆண்டின் நாட்கள் மிக குறைவாக இருக்கும் .மாணவர்கள் எப்படி பாடங்களை சரிவர படிக்க முடியும் ?ஆசிரியர்களான நீங்கள் உங்கள் நலனை மட்டும் சிந்திக்காமல் மாணவர்களின் நலனையும் சிந்தியுங்கள் .

  ReplyDelete
 11. Enga varumanathula pathiya private school ku tharathunu reason only govermment teachers than
  Government dress kuduthu sapadu pottu laptop kuduthu free ah education kuduthum goverment school Mela nampikai varala because poor teaching
  So goverment ah Korai solla Mudiyathu teaching effective ah I'lla Athunala than teacher Avanga school la setha matranga

  ReplyDelete
 12. paper valuation is very important work everybody should cooperate.if again delayed next acadamic year students should suffer.

  ReplyDelete
 13. govt school teachers should not tell unacceptable reasons.police nurse revenue department staff work night and day.even postoffice bank staff work.in that office also have ladies staff with family.how they work should think.

  ReplyDelete
  Replies
  1. Nenga job vangitinga nu poramai poramai nu sollathinga unmayave Vayitherichal than but job vangitinga nu illa goverment ivlo facilities kuduthum sariyana teaching and coaching Illanu private school la sethara vayitherichal than

   Delete
 14. Govt teachers prayer like this only ,God plus extend lockdown untill 2022,23.,,bs no work , full salary, ,every year before paper valuation strike , ana private teachers only will face consequence ,I experienced

  ReplyDelete
  Replies
  1. நீ மூடுடா... உனக்கு அரசு வேலை கிடைக்கல அதுக்காக இப்படி பேச கூடாது

   Delete
  2. சரியான அடி

   Delete
  3. Mr. Learn English first. Lot of errors. Your English is horrible.

   Delete
  4. Arasu velai endral velai seiyamal irupathu endru artham illai because u are public servant you are getting money from them govermet job avlo Onnum perumai illa intha kalathula ore oru nalla Vidayam Eppadi irunthalum salary vanthurum avlo than tea kadai vacha Ungala Vida nalla sampathikalam but poor teaching Nala school close pandra news ah kekum pothu avlo eriyuthu Vayiru itha ne Ean kekara nu sollathinga I'm also a public

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி