அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்!! - kalviseithi

May 23, 2020

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்!!சென்னை மாநகராட்சி சார்பில் 10 - ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்க ஆன்ட்ராய்ட் போன்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது . தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தற்போது 9 ம் வகுப்பு முடித்து , 10 ம் வகுப்பிற்கு செல்ல உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 5,000 பேருக்கு , ' ரெட்மி நோட் 5 ' என்ற ஆன்டிராய்டு மொபைல் வழங்கப்பட்டுள்ளது . அதேபோல் , 11 ம் வகுப்பு முடித்து , 12 ம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கும் , அடுத்த வாரம் ஆன்டிராய்டு மொபைல்கள் வழங்கப்பட உள்ளது .

மாணவர்களை ஆசிரியர்கள் போனில் அழைத்து , ஆன்ட்ராய்டு மொபைல்கள் வழங்கியதை எதிர்பாராத , மாணவ மாணவிகள் மகிழ்ச்சியில் திழைத்துள்ளனர் . தமிழகத்தில் பள்ளிகள் திறக்கின்ற வரை , மாணவர்களுக்கு , ' ஜூம் செயலி ' வழியாக கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் ஆகிய பாடங்களை நடத்த இருப்பதாகவும் , இதனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.ஏற்கனவே மாணவர்கள் வீடுகளில் அதிக நேரம் செல்போன்கள் பயன்படுத்தி வருகின்றனர் . இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு செல்போன் வழங்கியிருப்பது மாணவர்களை படிப்பில் இருந்து கவனத்தை திசை திருப்பும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கருத்து முன்வைக்கப்படுகின்றது .

6 comments:

 1. 11th accountancy subject videos
  Plz share.
  Thank you


  https://www.youtube.com/playlist?list=PLg4IwjyIyB9RWoglDSl7wcselII7LMySf

  ReplyDelete
 2. அரசு பள்ளி மாணவர்களை சீர்கேடு அடையச் செய்யும் வழிமுறை தான் இந்த smart phone.

  ReplyDelete
 3. இவர்கள் நியமித்த பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிய இந்த அரசு இதையாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி அரைநாள் மட்டும் வேலை அதுவும் வாரத்தில் 3 நாள் மட்டும் வேலை என்று எந்த வகையிலும் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியாத வகையில் நியமனம் செய்த இவர்களுக்கே இந்த புண்ணியம் சேரும். தற்போது இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே ஏற்படுத்தவில்லை இந்த அரசு. இதில் 58 வயது என்பதை 59 ஆக ஓய்வு வயது மாற்றப்பட்டு இளைஞர்களின் கனவில் மண்ணை இந்த அரசு அள்ளிப் போட்டிருக்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் சென்ற ஆண்டே வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தற்போது புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை என்பது படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர் பயிற்சி முடித்த மற்றும் பல்வேறு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள அனைவருடைய வாழ்க்கையும் இந்த ஆட்சியில் கேள்விக்குறியே.... TET பாஸ் பண்ணவேண்டும். ஆனால் வேலை கிடையாது. எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து பாஸ் ஆகி கடைசியில் வேலையும் போடுவதில்லை. ஏற்கனவே வேலைவாய்பு்பு போடுவதில்லை என்று பணியிடங்களை குறைத்தார்கள். தற்போது மேற்சொன்ன காரணங்களால் படித்தவர்கள் நடுத்தெருவிற்கு வருவது தான் இந்த ஆட்சியில் நடக்கிறது.

  ReplyDelete
 4. ஆசிரியர் பணி அறப்பணி என்று நான் மிகவும் நேசித்து நான் ஆசிரியர் பயிற்சி Montessori training படித்தேன் பின்பு ஆசிரியர் பயிற்சி அதன் பின்னர் B.ed இப்படி தேர்ச்சி பெற்றேன

  ReplyDelete
 5. Lap Top now Smart phone. Film now Facebook.

  ReplyDelete
 6. Lap Top now Smart phone. Film now Facebook.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி