இனி ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகள் - யுஜிசி மீண்டும் அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2020

இனி ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகள் - யுஜிசி மீண்டும் அனுமதி


ஒரு கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர், அதே கல்லூரியிலோ அல்லது மற்ற கல்வி நிறுவனத்திலோ, தொலைநிலைக்கல்வி, ஆன்லைன் முறையில் மற்றுமொரு பட்டப்படிப்பை இனி படிக்கலாம் என யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது.

மாணவர்கள் தங்கள் படிக்கும் படிப்புகளுக்கு ஏற்ற வேலை தற்போது பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பது பெரும்பாலான மாணவர்களின் குற்றச்சாட்டுகளாக உள்ளது. படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததால், அவர்கள் கிடைக்கும் வேலையிலும் அவர்களால் திறம்பட செயலாற்ற முடிவதில்லை. இதன்காரணமாக, அவர்கள் பல வேலைகளில் மாறிக்கொண்டே உள்ளனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில், மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கும் திட்டத்துக்கு பல்கலைக்கழக மானிய குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, ஒரு கல்லூரி, பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர், அதே கல்லூரியிலோ அல்லது வேறு எந்தவொரு கல்வி நிறுவனத்திலோ, ஆன்லைன் வழியிலோ அல்லது அஞ்சல் தொலைநிலைக்கல்வி முறையிலோ அவருக்கு பிடித்த  (பொருளாதாரம், அறிவியல்) என  வேறொரு துறையில் மற்றொரு பட்டப்படிப்பை படிக்க இயலும்.

ஒரே நேரத்தில் இரட்டை படிப்பு திட்டத்திற்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ள  நிலையில், யுஜிசி துணைத்தலைவர் பூஷன் பட்வர்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள குழு, இத்திட்டம் குறித்து ஆராய்ந்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும்.

கல்லூரி பட்டப்படிப்பில் தேவையான  வருகைப்பதிவேடு இருக்கும் மாணவர்களே, இரண்டாவது பட்டப்படிப்பை ஆன்லைனிலோ அல்லது தொலைநிலைக்கல்வி முறையிலோ தொடர முடியும். இந்த இரட்டை பட்டப்படிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறைப்படி, படிக்கும் திட்டம் கடந்த  2016}ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து தற்போது இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளில் இரண்டு பட்டப்படிப்பிற்கான சான்றிதழ்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இக்காலத்தில் மாணவர்கள் பட்டப் படிப்புடன் சேர்த்து திறன் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் படிப்புகளை படிக்க இந்தத் திட்டம் சிறந்த வாய்ப்பாக அமையும் என  பேராசிரியர்கள்
தெரிவித்தனர்.

3 comments:

  1. இது ரெகுலராக கல்லூரியில் படிப்பவர்களுக்கு மட்டுமா ? அல்லது தொலைநிலைக் கல்வியில் பயில்வோருக்கும் பொருந்துமா ?

    ReplyDelete
  2. Shall we study one pg in distance while doing b. Ed?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி