பி.எச்டி., மாணவர்களுக்கு ஆறு மாத கால அவகாச நீட்டிப்பு வழங்கி, அனைத்து கல்லுாரிகளுக்கும் பாரதியார் பல்கலை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
கொரோனா காரணமாக கல்லுாரி, பல்கலை மூடப்பட்டுள்ள நிலையில், செமஸ்டர் தேர்வுகள், அடுத்தாண்டு மாணவர் சேர்க்கை போன்ற பல்வேறு விஷயங்களுக்கு யு.ஜி.சி., வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.இதில், எம்.பில்., மற்றும் பி.எச்டி., ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆறு மாத கால நீட்டிப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக கோவை, பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள அனைத்து கல்லுாரிகளுக்கும் பல்கலை பதிவாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், 'யு.ஜி.சி., வழிகாட்டுதலின்படி கொரோனா காரணமாக ஏற்பட்ட சில தடைகளால், பி.எச்டி., ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்க, அதிகபட்சம் ஆறு மாத கால அவகாச நீட்டிப்பு வழங்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி