ஊரடங்கிலும் நுழைவுத்தேர்வு - ஊட்டி தனியார்பள்ளி அட்டகாசம்! - kalviseithi

May 21, 2020

ஊரடங்கிலும் நுழைவுத்தேர்வு - ஊட்டி தனியார்பள்ளி அட்டகாசம்!நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் புதிதாகச் சேர உள்ள மாணவ, மாணவிகள் ‌மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஊரடங்கை மீறி கடந்த சில தினங்களாக ரகசியமாக நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதாக மாவட்ட அதிகாரிகளுக்குத் தகவல் வந்தவண்ணம் இருந்தது.

தனியார் பள்ளி

தகவலின் அடிப்படையில் அந்தப் பள்ளிக்கு நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நான்காம் வகுப்பு மாணவர் ஒருவர் மாஸ்க் அணிந்தபடி நுழைவுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்தார்.


இந்தச் சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ``எங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதில் ரகசியமாக நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வினாத்தாள்

முதற்கட்டமாகப் பள்ளி வளாகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றிப் பூட்டியுள்ளோம். தொடர் விசாரணைக்குப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். இந்த விவகாரம் குறித்துப் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட முயற்சி செய்தோம். அவர்கள் நம்மிடம் பேச மறுத்துவிட்டனர்.

private school

அதிகாரிகளின் விசாரணையில், இந்தப் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தும் மையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கட்டணம் வசூலிப்பதே பெரும் குற்றமாகக் கருதப்படும் நிலையில் அதற்கு ஒருபடி மேலே போய் அடுத்த கல்வியாண்டுக்கு நுழைவுத்தேர்வு நடத்திக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் அதிகாரிகள்.

1 comment:

  1. see the power of private school government just see what happens unable to take action. this is not only in ooty all over tamilnadu. thus the reality.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி