ஓய்வு ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு நிறுத்தம் பல கோடி ரூபாய் மிச்சப்படுத்த ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2020

ஓய்வு ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு நிறுத்தம் பல கோடி ரூபாய் மிச்சப்படுத்த ஆலோசனை


பள்ளி, கல்லுாரிகள் செயல்படாத நிலையில், ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்குவது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக, பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. அடுத்த கல்வி ஆண்டில் தான்,பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. அதுவரை, ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களில் ஒரு பிரிவினருக்கு பணிகள் இல்லை.அதாவது, 10ம் வகுப்பு பாடம் எடுக்கும் பட்டதாரி மற்றும் மேல்நிலை வகுப்பு நடத்தும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும், விடைத்தாள் திருத்தும் பணிகள் உள்ளன. மற்ற ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், புதிய கல்விஆண்டு வரை பணிகள் இல்லை.

இந்நிலையில், மார்ச்சில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, இந்த கல்வி ஆண்டு முடியும் காலமான, மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என, கல்வி அலுவலகங்களுக்கு கடிதங்கள் வந்துள்ளன.ஒவ்வொரு ஆண்டும், பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் போது, ஓய்வு காலத்தை கடந்தாலும், அந்த கல்வி ஆண்டு முடியும் மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பள்ளி, கல்லுாரிகள் செயல்படாததால், பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என்ற முடிவுக்கு, பள்ளி மற்றும் கல்லுாரி கல்வித்துறை வந்துள்ளது.எனவே, விடை திருத்த பணிகள் உள்ள ஆசிரியர்களை தவிர, தொடக்க பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, பணி நீட்டிப்பு உத்தரவை நிறுத்தி வைக்க, மாவட்ட மற்றும் மண்டல அலுவலகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

பணி நீட்டிப்பு வழங்காவிட்டால், மே மாத சம்பளம் வழங்கப்படாது; ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும். இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும் என, அரசுக்கு சில அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி