மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தக் கூடாது - தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2020

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தக் கூடாது - தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!


கொரோனா பரவலால் தமிழகமெங்கும் பெரும்பாலான பள்ளிகளுக்கு மார்ச் 2வது வாரம் முதல் விடுமுறை விடப்பட்டது. ஊரடங்கு நாட்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’ என அரசு அறிவித்தது. தற்போதைய நிலவரப்படி ஜூலை அல்லது ஆகஸ்டில்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், சென்னை உட்பட பல மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் அரசுகள் தவிக்கின்றன.


 ஆல் பாஸ் அறிவிப்பை தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் ‘ஆன்லைன் கிளாஸ்’ நடத்தப்பட்டு வருகிறது. சில பள்ளிகள் ஜூம் ஆப் மூலம் நேரடி ஆன்லைன் வகுப்புகள் நடத்துகின்றன. இதில் சிக்கல்கள் நிறைய இருப்பதால் வாட்ஸ் அப் உதவியுடன் பாடம் நடத்தும் முறைக்கு பல பள்ளிகள் மாறியுள்ளன. பள்ளி வகுப்பறையில் உள்ளது போலவே, ஒவ்வொரு பீரியட் ஆக பிரித்து வாட்ஸ் அப்பில் ஆடியோக்கள், வீடியோக்களை ஒவ்வொரு பாடத்திற்குரிய ஆசிரியர்கள் அனுப்புகின்றனர். அதை மாணவர்கள், ஹெட்போனில் கேட்டு செய்து, அதை போட்டோ எடுத்து அனுப்புகின்றனர். அதை டவுன்லோடு செய்து ஆசிரியர்கள் ஓகே செய்கின்றனர். இப்படியே வீட்டுப்பாடம், அசைன்மென்ட் என கிளாஸ்களை கட்டுகிறது. ஸ்நாக்ஸ் மற்றும் லஞ்ச் இடைவேளை எல்லாம் விடப்படுகிறது.

இந்நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தக் கூடாது. அரசின் உத்தரவை மீறி ஆன்லைனில் பாடம் எடுத்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

6 comments:

  1. தன்னுடைய கருத்தை 1/2 மணி நேரத்தில் மாற்றி விட்டார்.

    ReplyDelete
  2. இவர் அறிக்கை எது உண்மை,எது பொய் என்று தெரியவில்லை

    ReplyDelete
  3. God save our children. Central Govt announced 12 tv channels.teachers know to what extent it will be useful

    ReplyDelete
  4. Santhosam.pasangala daily um home work nu solli kodumai padutharanga

    ReplyDelete
  5. In this time Online teaching should be engouraged ,central govt is aldo favour ,why tn govt opposite ,there is no meaning

    ReplyDelete
  6. .when everything is available in online why not the education?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி