மாணவர் சேர்க்கை நடத்துவதா? பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை - kalviseithi

May 22, 2020

மாணவர் சேர்க்கை நடத்துவதா? பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை


'ஊரடங்கு காலத்தில், அரசு அறிவிக்காத நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொண்டால், தொற்றுநோய் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக் கல்விஅதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு, வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது. இந்த காலக்கட்டத்தில், சில அடிப்படை பணிகளை மட்டும் மேற்கொள்ள, அரசு பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும்அலுவலகங்களுக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது.தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தி கொள்ளலாம்.

அதேபோல, தேவையான சில பணிகளை, ஆன்லைனில் மேற்கொள்ளலாம். அதற்கு மாறாக, பள்ளிகளை திறந்து, எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. இந்நிலையில், மாணவர் சேர்க்கையை நடத்துதல், கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பணிகளை, சில பள்ளிகள் மேற்கொண்டுள்ளன. பெற்றோரை பள்ளிக்கு வரவைத்து, அவர்களிடம் விண்ணப்பங்களையும் பெறுகின்றன.அதேபோல, மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்துகின்றன. இதுகுறித்து, புகார்கள் வந்த பள்ளிகள், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளால் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், மாவட்டக் கல்வி அதிகாரிகள் வழியே, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.அதில், 'கொரோனா ஊரடங்கு காலத்தில், அரசு அறிவிக்காத பணிகளை, பள்ளிகள் மேற்கொள்ளக்கூடாது. மாணவர்கள் மற்றும் பெற்றோரை பள்ளிக்கு வரவழைப்பது கூடாது. 'மீறும் பள்ளிகள் மீது, தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.

1 comment:

  1. private schools never obey government rules and orders every time they violate. this is well known to the public and government. i don't know why media and government unable to take action.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி