Flash News : TRB - 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை - ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2020

Flash News : TRB - 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை - ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி.

முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடைவிதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாலிடெக்னிக் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகாரில் 199 பேர் தவறான முறையில் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றதாக அறியப்பட்ட நிலையில்,  அவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடைவிதிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

* அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக 1, 058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

*இதன்படி, 2017 செப்டம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 2 ஆயிரம் பேருக்கு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

*இந்த தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதனிடையே தேர்வு செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர்களில் 199 பேர் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்று இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு புகார் வந்தது.

*இதையடுத்து விசாரணை நடத்தியதில் 199 தேர்வர்கள் 50 முதல் 100 மதிப்பெண் வரை கூடுதலாக பெற்று இருப்பது தெரிய வந்தது. 199 பேர் பல லட்சம் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றது விசாரணையில் உறுதி ஆகியது.

* டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடுகள் வெளிவந்த அந்த சமயத்தில்பாலிடெக்னிக் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.

* 199 பேர் அதன் அடிப்படையில் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தேர்வர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டது.

* இவ்வாறான சூழலில்,2017ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத ஆசிரியர் தேர்வு வாரியம் தடை விதித்துள்ளது.

35 comments:

  1. when will Polytechnic trb exam
    beo result,tet exam notification, trt exam syllabus

    ReplyDelete
    Replies
    1. In our current situation we never expect exam . The exam will be conducted after transport facility will release. So prepare well . This is great chance to us

      Delete
  2. Ok sir special teacher's posting la pending pogunga sir

    ReplyDelete
  3. தவறு செய்யாதவர்க்கு வேலை போடுங்கள்

    ReplyDelete
  4. பாஸ் பண்ணவனுக்கும் வேலை தராது, பணம் குடுத்தவனுக்கும் வேலை தராது.

    ReplyDelete
  5. What punishment given to person who got the money?

    ReplyDelete
  6. What punishment given to person who got the money?

    ReplyDelete
  7. What punishment given to person who got the money?

    ReplyDelete
  8. Big punishment, exam elutha koodathu

    ReplyDelete
  9. BEO Posting Result என்னாச்சு ? தவறுகள் நடக்குமுன்பே result போடணும்

    ReplyDelete
  10. Athey maathiri panam vaangunavan atharkku kaaranamaana athikaarikalaiyum velai paarkka thadai vithikka vendum.

    ReplyDelete
  11. Any news about pg trb chemistry 2019 Counseling

    ReplyDelete
  12. Pg trb computer science enquiry pannuga ...thapu irrudha re exam vaiunga ...sariya irrudha posting podunga...

    ReplyDelete
  13. Any news chemistry sellaction list new or old pls tell me

    ReplyDelete
  14. இதுபோல் குரூப் 4 இருக்கும் தடை விதிக்க வேண்டும் வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்

    ReplyDelete
  15. பணம் வாங்கினவன் என்ன பன்னிங்க...எல்லோருக்கும் தண்டனை கிடைக்கனும்...

    ReplyDelete
    Replies
    1. அவனை தண்டித்தால் முக்கிய புள்ளிகள் எல்லாம் உள்ள போகவேண்டியிருக்கும். எல்லாம் கூட்டு களவாணிங்க...

      Delete
  16. Csc department also many teacher involved in this crime.. please block those results and give the opportunity for those who wrote the exam honestly...

    ReplyDelete
  17. Definitely the same results come from CSC department pg trb ... Many of them involved in copying the answer and wrote the exam.. Those teacher should not give chance for any government jobs..

    ReplyDelete
  18. Those who helped them what's the punishment? Being in the govt job they have helped these fellows , should be dismissed.

    ReplyDelete
    Replies
    1. Important person are helping those candidates. How can Government dismiss that fellows?

      Delete
  19. சிறப்பாசிரியர்கள் சிறப்பாசிரியர்கள் சிறப்பாசிரியர்கள் சிறப்பாசிரியர்கள் என்று எங்களை பற்றி அதிகமாக பேசினார் செங்கோட்டையன் ஐயா அவர்கள்,,,,,தற்போது அதில் பாதி பேர் க்கு மட்டும் வேலை கொடுத்து விட்டீர்கள்,,,,,வழக்கு வழக்கு என்று போட்டுக்கொன்டிருந்தார்கள்,,,,,எல்லாம் நியாயம் வென்றுள்ளது,,,,,ஆனால் வேலை மட்டும் கொடுக்கவில்லை,,,,,எங்களுக்கு சந்தோஷ் கொடுக்க திருத்திபட்ட தேர்வு பட்டியல் முடிவுகளை வெளியிடுங்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளித்துள்ளது,,,அதன் அடிப்படையில் எங்களுக்கு வேலை கொடுங்கள்,,,,,நாங்கள் பள்ளி மற்றும் கல்லூரி எல்லாம் அரசாங்கத்தில் படித்தோம்,,,,,முன்னுரிமை வழங்க கேட்டு கொள்கிறோம்

      Delete
  20. அப்படி என்றால் மீதம் உள்ள தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கொடுங்கள்

    ReplyDelete
  21. சிறப்பாசிரியர்களாகிய உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உடற்கல்வி ஆசிரியர் பள்ளிக்கு மிகவும் முக்கியமானவர்கள்,,,,ஏன் என்றால் மாணவர் ஒழுங்கு கட்டுப்பாட்டினை அவர்கள் மட்டுமே திருத்த முடியம்,,so எல்லாரும் இனைந்து செங்கோட்டையன் ஐயாவிடம் கேளுங்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்த உடன்,,,,,கட்டாயம் உங்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்குவார்,,,,,செங்கோட்டையன் ஐயா மிகவும் நற்குணம் படைத்தவர்,,,,,,கட்டாயம் நமக்கு நன்மை செய்வார்,,,,

      Delete
    2. nalla seivaru kanavu kandukkitte erukka vendiyathuthan...

      Delete
  22. When polytechnic trb exam date

    ReplyDelete
  23. மணி மாட்டபபோறான்

    ReplyDelete
  24. கணினி ஆசிரியர் தேர்வெழுதி ஒரு வருடத்தைக் கடந்து விட்டோம். மிகச் சாதாரணமான வழக்குகளைக் காரணமாக வைத்துக்கொண்டு இன்னும் பணி நியமனம் செய்யப்படவில்லை.

    அரசு இதில் கொஞ்சம் கவனத்தைத் திருப்பினால் நலம். இதேபோலத்தான் வேதியியல் பாடநிலையும்...

    ReplyDelete
  25. பொருளியல் தமிழ் வரலாறு தற்காலிக பட்டியல்கள் மட்டுமே வெளியிடப்பட்டது இரண்டாம் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பணிநியமனம் வேண்டி நிற்கிறோம் ஊரடங்கு நிலவரம் நாடறியும் பணி நியமன ஆணை எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றும் என்ற நம்பிக்கை யோடு
    வேதியியல் பொருளியல் தமிழ் வரலாறு கணினி ஆசிரியர்கள்

    ReplyDelete
  26. Trb poly exam kandipa varathu... fraud candidate all r getting job through tnpsc..they all are very happy... trb exam ku wait panra ellarukum thadai thaan...wait panni wait panni.... waiting.....sagura varaikum...

    ReplyDelete
  27. பகுதி நேர ஆசிரியர்களாகிய நாம் வாழ்வாதாரம் இழந்து ஒன்பது வருடங்களாக போராடும் போது இப்படிப்பட்டவர்கள் ஏன் குறுக்கே வருகிறார்கள்? இந்த ஆட்சியாளர்கள் இப்படி அருமையான வாரத்தில் மூன்று அரைநாள் மற்றும் 12 நாட்களுக்கு என்று மட்டும் ஒரு போஸ்ட் உருவாக்கி மற்ற நாட்களில் எங்கே வேலைக்குச் செல்வார்கள்? எப்படி இவர்கள் குடும்பம் நடத்துவார்கள் என்பது கூட தெரியாமல் இந்த சிறப்பான ஆசிரியர் பணியினைக் கொடுத்து குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துள்ளார்கள். இவர்கள் போட்ட இந்த வேலைக்கு எவ்வளவு போராட்டம் செய்தும் 100 ரூபாய் கூட சம்பளம் ஏற்றாமல் வெறும் 7700 கொடுக்கிறார்கள். அதிலும் மே மாதம் சம்பளம் கிடையாது. இந்த சம்பளத்தை வைத்து என்ன செய்வார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகளுமா யோசிக்கக் கூடாது? ஆனால் பள்ளிகளில் உள்ள அனைத்து கணிப்பொறி வேலைகளையும் செய்வது யார் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் தெரியாமலா இருக்கின்றது? 16000 குடும்பங்களின் வாழ்க்கையில் இவர்கள் விளையாடுகிறார்கள். இவர்களின் வயிற்றில் அடிக்கும் அனைவரின் வாழ்க்கையும் நாசமாகப் போகட்டும். பகுதி நேர ஆசிரியர் வேலையில் உள்ள கிட்டத்தட்ட அனைவரும் அதிகப்படியான கல்வித் தகுதியில் பணியாற்றுபவர்கள் தான் என்பதை அரசிடம் கோரிக்கை வைப்பதை குறுக்கே புகுந்த கேலி செய்பவர்கள் உணர வேண்டும்.

    ReplyDelete
  28. லூசு பயலுகளா...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி