Flash News : பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்து அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2020

Flash News : பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்து அரசாணை வெளியீடு.

அரசாணையில் , முதன்மை கல்வி அலுவலர் நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டும் , மாவட்டக் கல்வி அலுவலர் நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.


CEO Transfer And DEO Pro GO - Download here


மேற்காணும் அரசாணையில் , மாறுதல் அளிக்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தனது பணியிட பொறுப்புகளை மாவட்டத்தில் உள்ள மூத்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு உடன் புதிய பணியிடத்தில் சேருமாறும் , பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரிடம் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு உடன் புதிய பணியிடத்தில் பணியில் சேருமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் . மாவட்டக் கல்வி அலுவலர் பொறுப்பு நியமனத்திற்கான பின்னேற்பு ஆணை கோரி , தனியே கருத்துரு அனுப்புமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் . மேற்கண்டவாறு முழு கூடுதல் பொறுப்பேற்கும் அலுவலர் / தலைமை ஆசிரியர்கள் புதிய அலுவலர் பணியேற்கும் வரை உண்டியல்கள் ஏற்பளிப்பது உள்ளிட்ட நிதி அதிகாரத்துடன் கூடிய முழு கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.

பணிவிடுவிக்கப்படும் அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரிந்த அலுவலர்கள் சார்பாக மந்தண அறிக்கைகள் எழுத வேண்டியிருப்பின் , அதனை முடித்துவிட்டு புதிய பணியிடத்தில் சேருமாறும் , பணிவிடுவிப்பு மற்றும் பணியேற்பு அறிக்கையினை உடன் இவ்வியக்ககம் அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் .

7 comments:

  1. கல்விதுறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களுக்கு 7 ஆண்டுகள் ஆனபிறகும் பதவி உயர்வு இல்லை, ஆனால் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த DEO க்களுக்கு CEO பதவி உயர்வு என்னடா கொடுமை

    ReplyDelete
    Replies
    1. 20 ஆண்டுகள் அதற்குமெலும் பதவி உயர்வு இல்லாமலும்,
      ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்

      Delete
    2. ஆசிரியர்கள் வேற அமைச்சு பணியாளர்கள் வேற சார்,

      Delete
  2. BEO வேலை வழங்க வாய்ப்பு உண்டா தேர்வின் முடிவே இனி வரவில்லை ஏதேனும் வாய்ப்பு உண்டா தெரிந்தால் பதிவிடுங்கள்

    ReplyDelete
  3. பகுதி நேர ஆசிரியர்களாகிய நாம் வாழ்வாதாரம் இழந்து ஒன்பது வருடங்களாக போராடும் போது இப்படிப்பட்டவர்கள் ஏன் குறுக்கே வருகிறார்கள்? இந்த ஆட்சியாளர்கள் இப்படி அருமையான வாரத்தில் மூன்று அரைநாள் மற்றும் 12 நாட்களுக்கு என்று மட்டும் ஒரு போஸ்ட் உருவாக்கி மற்ற நாட்களில் எங்கே வேலைக்குச் செல்வார்கள்? எப்படி இவர்கள் குடும்பம் நடத்துவார்கள் என்பது கூட தெரியாமல் இந்த சிறப்பான ஆசிரியர் பணியினைக் கொடுத்து குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துள்ளார்கள். இவர்கள் போட்ட இந்த வேலைக்கு எவ்வளவு போராட்டம் செய்தும் 100 ரூபாய் கூட சம்பளம் ஏற்றாமல் வெறும் 7700 கொடுக்கிறார்கள். அதிலும் மே மாதம் சம்பளம் கிடையாது. இந்த சம்பளத்தை வைத்து என்ன செய்வார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகளுமா யோசிக்கக் கூடாது? ஆனால் பள்ளிகளில் உள்ள அனைத்து கணிப்பொறி வேலைகளையும் செய்வது யார் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் தெரியாமலா இருக்கின்றது? 16000 குடும்பங்களின் வாழ்க்கையில் இவர்கள் விளையாடுகிறார்கள். இவர்களின் வயிற்றில் அடிக்கும் அனைவரின் வாழ்க்கையும் நாசமாகப் போகட்டும். பகுதி நேர ஆசிரியர் வேலையில் உள்ள கிட்டத்தட்ட அனைவரும் அதிகப்படியான கல்வித் தகுதியில் பணியாற்றுபவர்கள் தான் என்பதை அரசிடம் கோரிக்கை வைப்பதை குறுக்கே புகுந்த கேலி செய்பவர்கள் உணர வேண்டும்.

    ReplyDelete
  4. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறினார்கள். மிகவும் கஷ்டப்பட்டு தேர்ச்சி பெற்றோம். 2013 -ல் தேர்ச்சி பெற்று தற்போது சான்றிதழ் காலாவதியாகப் போகிறது. இடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் என்று மைக்கை நீட்டும்போதெல்லாம் கூறினார். ஆனால் நிரப்பப்படவே இல்லை இன்று வரை. இப்படி போட்டித் தேர்வுகளுக்கே படித்துக் கொண்டு இருந்தால் வாழ்க்கையை எப்படி ஓட்டுவது? தேர்ச்சி பெற்று என்ன பிரயோஜனம்... 2013-ல் தேர்ச்சி பெற்று காலாவதியாகப் போகிறது சான்றிதழ். கல்வித்துறை கைவிட்டு விட்டதா....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி