KH மற்றும் BC தலைப்புகளுக்கு 2020-21ம் நிதியாண்டிற்கான திட்ட நிதி ஒதுக்கீடு மாவட்ட வாரியாக பகிர்ந்தளித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2020

KH மற்றும் BC தலைப்புகளுக்கு 2020-21ம் நிதியாண்டிற்கான திட்ட நிதி ஒதுக்கீடு மாவட்ட வாரியாக பகிர்ந்தளித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு.


பள்ளிக் கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளில் " 2202.General Education 02. Secondary Education 109. Government Secondary Schools - State's Expenditure - BC , KH . Upgradation of Schools under Rashtriya Madhyamik Shiksha Abhiyan . ” என்ற கணக்குத் தலைப்பிற்கு 2020-21 ஆம் ஆண்டுக்கான திட்ட நிதி ஒதுக்கீடு ( Bidget Estimate ) வழங்கப்பட்டுள்ளது.

இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு பெறப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டை அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் / முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மேற்படி கணக்குத் தலைப்பின்கீழ் நிதி ஒதுக்கீடு 2020-21 ஆம் ஆண்டுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் / முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள திட்ட மதிப்பீட்டு , நிதி ஒதுக்கீட்டினை உடன் உரிய பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்து , பகிர்ந்தளித்த விவரத்தினை மாநில திட்ட இயக்குநருக்கு பத்து தினங்களுக்குள் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளுக்கும் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீட்டினை பகிர்ந்தளிக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் சரி சமமாகப் பகிர்ந்தளிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கலாகிறது.

இச்செயல்முறைகள் பெற்றுக் கொண்டமைக்கு உரிய ஒப்புதலை உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் / முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BC,  KH Allotment List - District Wise - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி