10th ,11th Public Exam 2020 - பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்களை ஒப்படைத்தல் தொடர்பான அறிவுரைகள் தேர்வுத்துறை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2020

10th ,11th Public Exam 2020 - பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்களை ஒப்படைத்தல் தொடர்பான அறிவுரைகள் தேர்வுத்துறை வெளியீடு.




DGE Instructions - Download here...

2019-2020 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களான வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் ( புதிய பாடத்திட்டம் ) வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் மற்றும் தொழிற்கல்வி கணக்குப்பதிவியல் ( பழைய பாடத்திட்டம் ) ஆகியவற்றிகான தேர்வுகள் இரத்து செய்யப்படுகிறது எனவும் , மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 % மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகைப் பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்களும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அரசாணையின்படி , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளை எழுதுவதற்கு பதிவு செய்த மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 % மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.

எனவே , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளித் தலைமையாசிரிர்களுக்கும் பின்வரும் அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

4 comments:

  1. Awarding marks for sslc students based on their quarterly and half yearly is an injustice to all the 9 lakh students. Usually students prepare hard for their board exam not for terminal exams. Then on what basis has government taken such a decision. With their low marks how can the students of this batch compete with other batch students in the exams conducted by the same government. Will special concession be provided??? ?

    ReplyDelete
  2. கேஸ் போடுங்க....
    உருபட்ரும்....

    ReplyDelete
  3. விடைத்தாள் காணாமல் போயிருந்தால் என்ன செய்வது
    Plz reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி