பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார்; 12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலையில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2020

பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார்; 12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலையில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது.  அன்றைய தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாதால் 36,000 மாணவர்களால் தேர்வில் பங்கேற்க முடியவில்லை.

அவர்களுக்கு மட்டும் பின்னர் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 10-ம்  தேதியுடன் அனைத்து மையங்களிலும், 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்தது.


 தொடர்ந்து, விடைத்தாள்களின் மொத்த மதிப்பெண்களை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. இந்த பணிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடியும்  என்பதால் இந்த மாத இறுதியில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்த  பணி நடைபெற்று வருகிறது என்றார். தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து விரைவில் முடிவ செய்யப்படும். தனியார் பள்ளிகள் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்துவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார்.

தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து தகவல் கேட்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது; இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாராகும். பள்ளிகள் திறப்பு பற்றி சூழ்நிலைக்கு ஏற்ப முதல்வர்  பழனிசாமி முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார்.

14 comments:

  1. 10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் நிலை

    ReplyDelete
  2. First our CM should change him immediately from edu minister post

    ReplyDelete
  3. மனிதாபிமானமற்ற அரசாக அம்மாவின் அரசு! 16000 பேருக்கு வாழ்வளிக்கும் வகையில் பகுதி நேர ஆசிரியர் பணியை 5000 ரூ சம்பளத்தில் நியமித்து 16000 குடும்பங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிய அம்மாவின் அரசு தற்போது 9 ஆண்டுகள் ஆகியும் 7700 சம்பளத்தில் தவிக்கவிடுவதோடு மட்டுமல்லாமல் இந்த கொரோனா சமயத்தில் கூட மே மாதச் சம்பளம் இல்லாமல் செய்து வருகிறது இந்த மனிதாபிமானமற்ற அரசு.

    ReplyDelete
  4. மனிதாபிமானமற்ற அரசாக அம்மாவின் அரசு! 16000 பேருக்கு வாழ்வளிக்கும் வகையில் பகுதி நேர ஆசிரியர் பணியை 5000 ரூ சம்பளத்தில் நியமித்து 16000 குடும்பங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிய அம்மாவின் அரசு தற்போது 9 ஆண்டுகள் ஆகியும் 7700 சம்பளத்தில் தவிக்கவிடுவதோடு மட்டுமல்லாமல் இந்த கொரோனா சமயத்தில் கூட மே மாதச் சம்பளம் இல்லாமல் செய்து வருகிறது இந்த மனிதாபிமானமற்ற அரசு.

    ReplyDelete
  5. Corona will not affect teachers or proffesors a cunning government.. Teachers don't have family or children ah.. Give some vacation for them also... Yarumey ilatha kadaila yarukutn tea poduringa please save the teaching community... No salary but working leaving our family in fear of corona

    ReplyDelete
  6. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  7. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  8. In beo exam which batch are you sir? Mark?

    ReplyDelete
  9. In beo exam which batch are you sir?marks?

    ReplyDelete
  10. ஐயா கல்லூரி மாணவர்கள் நிலையையும் யோசிங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி