மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு: 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் - kalviseithi

Jun 19, 2020

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு: 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்


மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஓபிசி இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஆண்டுதோறும் MBBS, MDMS என்ற இரண்டு பிரிவுகளில்  நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் MBBS பிரிவில் 15 சதவீதமும் MDMS என்கின்ற மருத்துவ மேற்படிப்பு பிரிவில் 50% சதவீதமும் , மேலும் சிறப்பு படிப்பு எனும் MCHDM என்ற பிரிவுக்கு 100 சதவீத இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு அனைத்து மாநிலங்களும் அளிப்பது வழக்கமான ஒன்றாகும். இதில் அண்மை காலமாக தமிழகத்தில் இதுகுறித்த சர்ச்சைகள் வெடித்தன. இதில் பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினருக்கு பல ஆண்டுகளாக அவர்களுக்கான இடங்கள் நிரப்பப் படவில்லை என தகவல் வெளியானது. இதனையடுத்து

இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது. அதன்படி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று திடீர் திருப்பமாக மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

6 comments:

 1. PART TIME COMPUTER INSTRUCTORS எல்லோரும் மே மாதத்திலும் கணிப்பொறி வேலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது ஜீன் மாதத்திலும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் திறமையாக. இதற்கு மேல் என்னதான் தகுதி வேண்டும்? அரசு அதிகாரிகள், கல்வித்துறையைச் சேர்ந்த அனைத்து உயரதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் பகுதி நேர ஆசிரியர்களின் பரிதாப நிலையைப் புரிந்து கொள்ளுங்கள் தயவு செய்து. ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளில் கணிப்பொறி ஆசிரியர்கள் நிரந்தரப் பணியிடங்களில் பணிபுரிவது கொஞ்சம் மட்டுமே. மீதமுள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் தான் தலைமையாசிரியர்கள் கூறும் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். மனசாட்சியோடு இதனை அனைத்து அதிகாரிகளும் விசாரித்துப் பாருங்கள்.

  ReplyDelete
 2. Beo whatsapp group 2020 8883121388

  ReplyDelete
 3. Beo whatsapp group 2020 8883121388

  ReplyDelete
 4. Pg chemistry posting when will come

  ReplyDelete
 5. Pg chemistry case detail pls

  ReplyDelete
 6. Etaothigitu ventum suprun court appil seiurom but not follow goverment court followseiya sona meetum suprun court porom

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி