கொரோனா தடுப்பு பணியில் 400 ஆசிரியர்கள் நியமனம்! - kalviseithi

Jun 23, 2020

கொரோனா தடுப்பு பணியில் 400 ஆசிரியர்கள் நியமனம்!தனிமைப்படுத்தப்பட்ட வீடு களை கண்காணிக்க வார்டு அள வில் தன்னார்வலர்கள் , மாநகராட்சி அதிகாரிகள் , போலீஸார் நியமிக் கப்பட்டுள்ளனர். தன்னார்வலர்கள் முறையாக வீடுவீடாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின் றனாரா என களத்துக்கு சென்று ஆய்வு செய்யவும் , வார்டு அளவில் அனைத்து அலுவலர்களையும் ஒருங்கிணைக்கவும் மாநகராட்சி முழுவதும் உள்ள 200 வார்டுகளில் தலா 2 மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் வீதம் 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் , தங்கள் ஆய்வு விவரங்களை மாநகராட்சியின் கரோனா தொடர் பான இணையதளத்தில் தினமும் பதிவேற்றவும் மாநகராட்சி உத்தர விட்டுள்ளது.

3 comments:

 1. எல்லா வேலைகளும் கணிப்பொறி மூலம் செய்யப்பட வேண்டும். ஆனால் கணிப்பொறி ஆசிரியர் நியமிக்கப்படக் கூடாது. இந்த வேலைகளையெல்லாம் பகுதி நேர ஆசிரியர்கள் (கணிப்பொறி) முழு நேரமும் செய்ய வேண்டும். மே மாதமும் செய்ய வேண்டும். ஆனால் அவர்களுக்கு 7700-லிருந்து ஒரு பைசா கூட ஏற்றிக் கொடுக்கக்கூடாது. கல்வி சார்ந்த செயல்பாடுகளில் தமிழகம் முன்னோடி என்று மைக்கை நீட்டினால் கூறிக் கொள்ள வேண்டும். ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களில் கொடுக்கும் சம்பளத்தில் பாதி கூட கொடுக்கக் கூடாது. பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களுடைய கற்பித்தல் பணிக்கு மட்டும் அரைநாள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசு நிர்ப்பந்தம் செய்தால் முக்கால்வாசி மேல்நிலைப்பள்ளிகளில் சம்பள பில் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆட்டம் கண்டு விடும். இந்த வேலைகளை செய்வதற்கு கணிப்பொறி ஆசிரியரோ அல்லது வேறு கணிப்பொறி ஆப்ரேட்டர்களோ கிடையாது. இப்படி பகுதி நேர ஆசிரியர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் மனிதாபிமானமற்றவர்கள் நிச்சயம் கடவுளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். கொஞ்சம் கூட கருணையில்லையே இவர்களுக்கு. அம்மாவால் நியமிக்கப்பட்டவர்கள் தானே என்ற எண்ணம் கூட இல்லை.

  ReplyDelete
  Replies
  1. Enna dash ku andha velaiku poringa... Private la evlo jobs iruku

   Delete
 2. Part time teacher korna awareness poga solunga sariya irrukum

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி