இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கல்விக்கான தொலைக்காட்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2020

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கல்விக்கான தொலைக்காட்சி!


கொரோனா தொற்று அச்சம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இருப்பினும் பள்ளிக்கல்வி துறை கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு காலவரையறையின்றி விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றது. தமிழக பள்ளிக்கல்வித் துறை தனது துறையின் கீழ் இயங்கும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகிறது. பொதுவாக பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து துவங்கி இருக்க வேண்டும். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காக கல்வி தொலைக்காட்சி மூலம் தினமும் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 2400 வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வீடியோக்களை தினசரி பாடவாரியாக கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இதன்மூலம் மாணவர்கள் ஊரடங்கு காலகட்டத்தில் தங்கள் வீட்டில் இருந்தவாறே பாடங்களை கற்று வருகின்றனர்.

ஆசிரியர்கள் நேரடியாக தொலைக்காட்சி முன்தோன்றி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகின்றனர். செயல்முறை விளக்கங்களையும் அளிக்கின்றனர். இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உற்சாகம் ஊட்டக் கூடியதாகவும் உள்ளது.

மேலும் வரும் கல்வியாண்டுக்கான முழு பாடங்களையும் கல்வி தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளில் கல்வி தொலைக்காட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு முதல் பருவத்திற்கான பாடத்திட்டங்களை வீடியோக்களாக பதிவு செய்யும் பணியை கல்வித் தொலைக்காட்சி செய்து வருகிறது.

மேலும் நீட் மற்றும் ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு வருகிறது. இயற்பியல் , வேதியியல் , விலங்கியல், தாவரவியல் , கணிதம் ஆகிய பாடங்களுக்கு தினமும் தலா ஒரு மணி நேரம் நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அகில இந்திய அளவில் தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதற்கு இந்த பயிற்சி வகுப்புகள் மிகவும் உதவும்.

கைத்தொழில் பழகு, முப்பரிமாணம் , யாமறிந்த மொழிகளிலே, ஆய்வுக்கூடம், ஜாமெட்ரி பாக்ஸ், பாடுவோம் படிப்போம், உலகம் யாவையும் ஆகிய தலைப்புகளிலும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகிறது. இந்த தலைப்புகளில் தமிழ் , ஆங்கிலம் , கணிதம், அறிவியல், சமூக அறிவியல் கணினி அறிவியல், தொழிற்கல்வி ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனியாக அட்டவணை போடப்பட்டு காலை 7 மணி முதல் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கல்விக்கான தொலைக்காட்சி உருவாக்கப்பட்டு மாணவர்களுக்காக ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். கொரானா வைரஸ் தொற்று அச்சம் இருக்கின்ற இந்த காலகட்டத்தில் பள்ளிக்கூடம் செல்ல முடியாத மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

4 comments:

  1. Please don't give false information.....kerela, Gujarat,ncert mhrd,ignou started education tv channels before TN DSE

    ReplyDelete
  2. Kalvi tv is only available in Tacktv.....but kerela govt education tv channel will available on all dth's like dishtv tatasky Videocon d2h

    ReplyDelete
  3. How many schools have 100% permanent faculty??
    How many schools hv proper interconnection facility?
    How many schools hv desks & benches??
    How many schools hv separate rooms for separate class??
    How many schools hv proper drinking water, toilets (upto the mark), etc

    Idhellam pesa maateenga... Kalvi tv iruku nu buildup mattum.. 100% proper faculties appoint pannitu idhellam pesunga..

    ReplyDelete
  4. எல்லா வேலைகளும் கணிப்பொறி மூலம் செய்யப்பட வேண்டும். ஆனால் கணிப்பொறி ஆசிரியர் நியமிக்கப்படக் கூடாது. இந்த வேலைகளையெல்லாம் பகுதி நேர ஆசிரியர்கள் (கணிப்பொறி) முழு நேரமும் செய்ய வேண்டும். மே மாதமும் செய்ய வேண்டும். ஆனால் அவர்களுக்கு 7700-லிருந்து ஒரு பைசா கூட ஏற்றிக் கொடுக்கக்கூடாது. கல்வி சார்ந்த செயல்பாடுகளில் தமிழகம் முன்னோடி என்று மைக்கை நீட்டினால் கூறிக் கொள்ள வேண்டும். ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களில் கொடுக்கும் சம்பளத்தில் பாதி கூட கொடுக்கக் கூடாது. பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களுடைய கற்பித்தல் பணிக்கு மட்டும் அரைநாள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசு நிர்ப்பந்தம் செய்தால் முக்கால்வாசி மேல்நிலைப்பள்ளிகளில் சம்பள பில் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆட்டம் கண்டு விடும். இந்த வேலைகளை செய்வதற்கு கணிப்பொறி ஆசிரியரோ அல்லது வேறு கணிப்பொறி ஆப்ரேட்டர்களோ கிடையாது. இப்படி பகுதி நேர ஆசிரியர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் மனிதாபிமானமற்றவர்கள் நிச்சயம் கடவுளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். கொஞ்சம் கூட கருணையில்லையே இவர்களுக்கு. அம்மாவால் நியமிக்கப்பட்டவர்கள் தானே என்ற எண்ணம் கூட இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி