காலாண்டு தேர்வை ரத்து - காலை மாலை என இரண்டு வேளை சுழற்சி முறையில் வகுப்புகள் - குழு பரிந்துரை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2020

காலாண்டு தேர்வை ரத்து - காலை மாலை என இரண்டு வேளை சுழற்சி முறையில் வகுப்புகள் - குழு பரிந்துரை!


தமிழகத்தில் கொரனோ வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது இந்த நிலையில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் தற்போது ஜூன் மாதம் முடிவடையும் நிலையிலும் பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. அதுமட்டுமின்றி இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பதும் நிலைமை ஓரளவுக்கு சரியானால் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது


இந்த நிலையில் கல்வித் துறை ஆணையர் பிஜி தாமஸ் தலைமையில் 18 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு கல்வி ஆண்டு தொடங்குவது குறித்த பரிசீலனைகளை தமிழக அரசு கேட்டுள்ளது. இந்த நிலையில் இந்த குழு மாணவர் நலன் மற்றும் கற்றல் கற்பித்தல் ஆகியவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளது

அந்த அறிக்கையில் செப்டம்பர் மாதம் வழக்கமாக நடைபெறும் காலாண்டு தேர்வை ரத்து செய்து, காலை மாலை என இரண்டு வேளை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது, பாடத்திட்டங்களை குறைப்பது, ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. எல்லா வேலைகளும் கணிப்பொறி மூலம் செய்யப்பட வேண்டும். ஆனால் கணிப்பொறி ஆசிரியர் நியமிக்கப்படக் கூடாது. இந்த வேலைகளையெல்லாம் பகுதி நேர ஆசிரியர்கள் (கணிப்பொறி) முழு நேரமும் செய்ய வேண்டும். மே மாதமும் செய்ய வேண்டும். ஆனால் அவர்களுக்கு 7700-லிருந்து ஒரு பைசா கூட ஏற்றிக் கொடுக்கக்கூடாது. கல்வி சார்ந்த செயல்பாடுகளில் தமிழகம் முன்னோடி என்று மைக்கை நீட்டினால் கூறிக் கொள்ள வேண்டும். ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களில் கொடுக்கும் சம்பளத்தில் பாதி கூட கொடுக்கக் கூடாது. பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களுடைய கற்பித்தல் பணிக்கு மட்டும் அரைநாள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசு நிர்ப்பந்தம் செய்தால் முக்கால்வாசி மேல்நிலைப்பள்ளிகளில் சம்பள பில் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆட்டம் கண்டு விடும். இந்த வேலைகளை செய்வதற்கு கணிப்பொறி ஆசிரியரோ அல்லது வேறு கணிப்பொறி ஆப்ரேட்டர்களோ கிடையாது. இப்படி பகுதி நேர ஆசிரியர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் மனிதாபிமானமற்றவர்கள் நிச்சயம் கடவுளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். கொஞ்சம் கூட கருணையில்லையே இவர்களுக்கு. அம்மாவால் நியமிக்கப்பட்டவர்கள் தானே என்ற எண்ணம் கூட இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி