சி.ஏ., தேர்வுக்கான இலவச, 'ஆன்லைன்' பயிற்சி வகுப்புகளை, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். - kalviseithi

Jun 11, 2020

சி.ஏ., தேர்வுக்கான இலவச, 'ஆன்லைன்' பயிற்சி வகுப்புகளை, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.


அரசு பள்ளி மாணவர்களுக்கு, சி.ஏ., தேர்வுக்கான இலவச, 'ஆன்லைன்' பயிற்சி வகுப்புகளை, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.தமிழக பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, பட்டய கணக்காளர் என்ற, ஆடிட்டர் பதவிக்கான, சி.ஏ., தேர்வில் வெற்றி பெற, மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.ஈரோடு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆன்லைன் வழி பயிற்சியை, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தங்கள் விபரங்களை, sircclasses@icai.in என்ற, இ - மெயில் முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகள், செப்டம்பர், 20 வரை நடக்கும். தினமும் காலை, 8:00 முதல், 11:15 மணி வரையிலும், மாலை, 5:00 மணியில் இருந்து, இரவு, 8:15 வரையிலும், ஆன்லைனில்இந்த வகுப்புகள் நடக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி