கல்வி சேனல் மூலம் பாடம் செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2020

கல்வி சேனல் மூலம் பாடம் செங்கோட்டையன் தகவல்


''கல்வி சேனல் மூலம், மாணவ - மாணவியருக்கு கல்வி போதிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி, குள்ளம்பாளையம்வீட்டில், நம் நிருபருக்குஅமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:

கொரோனா தொற்று காரணமாக, பள்ளி மாணவ - மாணவியருக்கு, கல்வி சேனல் மூலம், பாடம் போதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.'ஆன்லைன்' வசதியை விட, கல்வி சேனல் மூலமாக, எளிதில் கல்வியை கொண்டு சேர்க்க முடியும்என்பதால், இம்முயற்சி மேற்கொண்டு உள்ளோம்.மேலும், பொதிகை உட்பட ஓரிரு சேனல்கள் மூலம், கல்வி போதிக்க முடிவு செய்துள்ளோம்.

வகுப்புக்கு ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில், திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.வகுப்பு வாரியாக பாடத் திட்டத்தை குறைக்க, முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை, ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கப்படலாம். ஒன்று முதல், பிளஸ் 2 வரை, பாடத்திட்டம் குறைக்கப்படும். எந்த வகுப்புக்கு, எந்த பாடம் முக்கியமோ, அந்த பாடங்களை மட்டுமே கொண்டு, பாடத்திட்டம் குறைக்கப்படுகிறது.

மேலும், ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, 71 லட்சம் மாணவ - மாணவி யருக்கு, வகுப்பு மற்றும் பாட வாரியாக புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, அந்தந்த குடோன்களுக்கு அனுப்பி, இருப்பு வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் உத்தரவுக்கு பின்பே, அனுப்பப்பட்டுள்ள பாடப் புத்தகத்தில், எந்த பாடங்களை தவிர்ப்பது, எதை போதிப்பதுஎன, அறிவிக்கப் படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

10 comments:

  1. கல்வி சேனல் மூலமாக பாடம் என்பது அருமையான திட்டம்.

    ReplyDelete
  2. Govt control la dha yela channels iruku so news channels la separate senji class wise oru channel daily two hour subject class nu telecast pana romba useful ah irukum.

    ReplyDelete
  3. Good idea to teach through exclusively kalvi channel.
    My application for the initiative

    ReplyDelete
  4. மனிதாபிமானமற்ற அரசாக அம்மாவின் அரசு! 16000 பேருக்கு வாழ்வளிக்கும் வகையில் பகுதி நேர ஆசிரியர் பணியை 5000 ரூ சம்பளத்தில் நியமித்து 16000 குடும்பங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிய அம்மாவின் அரசு தற்போது 9 ஆண்டுகள் ஆகியும் 7700 சம்பளத்தில் தவிக்கவிடுவதோடு மட்டுமல்லாமல் இந்த கொரோனா சமயத்தில் கூட மே மாதச் சம்பளம் இல்லாமல் செய்து வருகிறது இந்த மனிதாபிமானமற்ற அரசு. அருகில் உள்ள மற்ற மாநிலங்களில் 12000, 18000 கொடுக்கும் போது எதிலும் நாங்கள் சிறந்தவர்கள் என்று கூறும் இவர்கள் கொடுக்காமல் வஞ்சிப்பது ஏன்?

    ReplyDelete
  5. Many private schools are even conducting online test for small children and taking the marks for assessment, when govt hitself cancel all the board exam, but these private school doing like this.
    No body is reporting all these, kindly bring proper guide line to online classes.

    ReplyDelete
  6. Varum sattamandra therthalaiyum online muraiyil nadathuveerkalo?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி