'ஆன்லைன்' வகுப்பு ஆரம்பம்:'லேப்டாப்'களுக்கு தட்டுப்பாடு - kalviseithi

Jun 9, 2020

'ஆன்லைன்' வகுப்பு ஆரம்பம்:'லேப்டாப்'களுக்கு தட்டுப்பாடு


பெரும்பாலான தனியார் பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், 'லேப்டாப்'களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மார்ச், 24 முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில், செப்டம்பர் மாதம் தான், பள்ளிகள் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், ஆறு முதல், பிளஸ் 2 வரை ஆன்லைன் வகுப்புகளை துவங்கியுள்ளன. ஜூம் மற்றும் கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.இதற்கு, லேப்டாப், மைக்குடன் கூடிய ஹெட்போன் உள்ளிட்டவைவாங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால், பலரும்லேப்டாப் வாங்க, கடைகளுக்கு படையெடுக்கின்றனர்.

லேப்டாப் விற்பனையாளர்கள் கூறியதாவது:சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, லேப்டாப்கள் வர அனுமதிக்கப்படவில்லை. மேலும், அங்கு உற்பத்தி குறைந்ததாலும், உலகம் முழுதும் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

ஏற்கனவே வாங்கி வைத்திருந்த லேப்டாப்களே, தற்போது விற்பனையாகி வருகின்றன. இதுவும், இரு மாதங்களுக்கு முன்இருந்ததை விட, 2,000 ரூபாய் அதிகரித்து விற்கப்படுகிறது. ஆனாலும், தேவைக்கேற்ப இல்லாததால், தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி