கொரோனா கணக்கெடுப்பு பணி ஆசிரியர்கள் " ஸ்ட்ரீட் வாரியர் " என்று அழைக்கப்படுவர்! - kalviseithi

Jun 25, 2020

கொரோனா கணக்கெடுப்பு பணி ஆசிரியர்கள் " ஸ்ட்ரீட் வாரியர் " என்று அழைக்கப்படுவர்!


சென்னையில் கொரோனா கணக்கெடுப்பு பணிக்கு வராத மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
சென்னையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரம் ஆசிரியர்கள் கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஆசிரியர்கள் நேரடியாக கொரோனா பாதித்த இடங்களுக்கு சென்று கணக்கெடுப்பு நடத்தி, தகவல்களை பதிய வேண்டும் என்றும் இந்த பணியில் ஈடுபடுவோர் ஸ்ட்ரீட் வாரியர் என அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் தங்களை கட்டாயப்படுத்தி கொரோனா களப்பணியில் ஈடுபட வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
களப்பணியின் போது கொரோனா பாதித்தவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினால் போதும் என்ற நிலையில், இந்த பணியை வீட்டில் இருந்தே செய்ய முடியும் என்றும் இதனை மாநகராட்சி நிர்வாகம் ஏற்க மறுப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

5 comments:

 1. நோய் தொற்று ஆசிரியர் சமூகத்திற்கு பரவவில்லை. இந்த கணக்கெடுப்பின் மூலம் இது சமூக தொற்றாக மாறிவிடும் . இதுபோன்ற செயல்களில் நேரடியாக ஆசிரியர் மட்டுமல்ல எந்த அரசு ஊழியர் அல்லது தற்காலிக ஊழியர் பயன்படுத்துவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை உணராத நிர்வாகம் செயல்பட்டால் எதிர்காலத்தில் நோய் தோற்றால் சிக்கலை சந்திக்க நேரிடும்.

  ReplyDelete
  Replies
  1. த‌குந்த‌ ப‌யிற்சி,பாதுகாப்பு உப‌க‌ர‌ண‌ங்க‌ள்,ம‌ருத்துவ‌ ம‌ற்றும்
   உயிர் காப்பீடு,உரிய‌ ம‌ரியாதையுட‌ன் த‌க‌ன‌ம்,இற‌ப்ப‌வ‌ர் குடும்ப‌த்தில் ஒருவ‌ர்க்கு அர‌சு ப‌ணி ஆகிய‌வ‌ற்றை அர‌சு அளித்து ஆசிரிய‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ விருப்ப‌முள்ள‌ அர‌சூழிய‌ர்க‌ளையும் தாராள‌மாக‌
   கொரொனோ த‌டுப்பு ப‌ணியில் ஈடுப‌டுத்த‌லாம்...செய்வார்க‌ளா?..

   Delete
 2. If doctors think like that can we control Corona. Measures should taken to control this pandemic. Those who are getting salary from government they can work for people also.The money is coming from people tax only.

  ReplyDelete
  Replies
  1. த‌குந்த‌ ப‌யிற்சி,பாதுகாப்பு உப‌க‌ர‌ண‌ங்க‌ள்,ம‌ருத்துவ‌ ம‌ற்றும்
   உயிர் காப்பீடு,உரிய‌ ம‌ரியாதையுட‌ன் த‌க‌ன‌ம்,இற‌ப்ப‌வ‌ர் குடும்ப‌த்தில் ஒருவ‌ர்க்கு அர‌சு ப‌ணி ஆகிய‌வ‌ற்றை அர‌சு அளித்து ஆசிரிய‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ விருப்ப‌முள்ள‌ அர‌சூழிய‌ர்க‌ளையும் தாராள‌மாக‌
   கொரொனோ த‌டுப்பு ப‌ணியில் ஈடுப‌டுத்த‌லாம்...
   செய்வார்க‌ளா?..

   Delete
 3. Part-time teachera use pannuga naga parthukarom..engaluku adhika salary mattum kodunga podhum appuram job conform panna solunga.. appuram h.m promotion aga engalukum writes irruku nu solunga podhum..ena velai koduthalum seiya ready..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி