கொரோனா பணியிலிருந்து ஆசிரியர்களை பணி விடுப்பு செய்ய கோரிக்கை! - kalviseithi

Jun 27, 2020

கொரோனா பணியிலிருந்து ஆசிரியர்களை பணி விடுப்பு செய்ய கோரிக்கை!தூத்துக்குடி மாவட்ட கொரானோ பணியில் விருப்பம் இல்லாத உடற்கல்வி ஆசிரியர்களை ஈடுபட கட்டாயப்படுத்துவது வருந்தத்தக்க செயலாகும்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் செயல் முறைகள் Roc No DMI/2994/2020  Date.06.2020 படி வெளி மாநிலம்,மற்றும் வெளி மாவட்டத்தில இருந்து வரும் மக்களைத் தடுத்து சோதனை செய்வதற்காக Quarantine location Check Post duty பணிக்கு காலை 7மணி முதல் பிற்பகல் 3 மணிவரையிலும்,3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும்இரவு 10 மணி முதல் காலை 7மணி வரையிலும் (7:00 am to 3:00 pm, 3:00pm to 10:00 pm, 10:00 pm to 7:00am ) உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளாரகள்.
                            மேற் கூறிய பணியானது காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த பணியாகும் அவர்களுக்கு சட்டப்படி அதிகாரமும் பாதுகாப்பும் உள்ளது. ஆனால் பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு  எந்தப் பாதுகாப்பும் கிடையாது தற்போது சாத்தான்குளம் பிரச்சனையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது இந்நிலையில் எந்தப் பாதுகாப்பும் இல்லாத உடற்கல்வி ஆசிரியர்களை பணியில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவது சரியாக இருக்காது.
            ஆசிரியர்கள் எப்பொழுதும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பணிகளையும் மாணவர் நலன் சார்ந்த பணிகளையும் செய்து வருகிறோம். அதற்கு மாறாக பொது இடங்களில் கட்டாயப்படுத்தி பாதுகாப்பு இல்லாத பணிகளில் பணி நியமனம் செய்வது தவறான முன்னூதாரனத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  எனவே மாண்புமிகு முதல்வர் அவர்களும் தலைமைச் செயலர்அவர்களும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களும் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறை ஆணையினை ரத்து செய்து உடற்கல்வி ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
                                                                                                                                                              S.சங்கரப்பெருமாள்.                 
நாள் : 27.06.2020.                                                           மாநிலத் தலைவர்-9382860582

2 comments:

  1. Part-time teacher ku indha puniyatha kodunga Naga parthukarom.. salary mattum kojam increase panni kodunga podhum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி