முப்பருவ பாடம், தேர்வு முறை ரத்து : பள்ளி கல்வித்துறை முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2020

முப்பருவ பாடம், தேர்வு முறை ரத்து : பள்ளி கல்வித்துறை முடிவு


ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ பாடம் மற்றும்தேர்வு முறையை, நடப்பு கல்வி ஆண்டில் ரத்து செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையால், மார்ச் முதல், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படவில்லை. ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.ஜூன் மாதம் நடைபெற வேண்டிய பள்ளிகள் திறப்பும், காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகள் மட்டும், 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகளை நடத்துவதற்கு போதிய நாட்கள் இல்லாததாலும், அனைத்து நாட்களும், மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடியாத நிலை உள்ளதாலும், பாடங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, பள்ளிக்கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில், ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.அக்குழுவினர், முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இரண்டாம் கட்ட அறிக்கையை, இந்த வாரஇறுதியில் தாக்கல் செய்ய உள்ளனர்.அதில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு,முப்பருவ பாடம் மற்றும் தேர்வுகளை ரத்து செய்யும்படி, பரிந்துரைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, காலாண்டு அல்லது முதல் பருவம், ஆகஸ்டில் முடியும் என்பதால், அப்போது தான் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளது. எனவே, முதல்பருவ பாடங்களை தனியாக நடத்த முடியாது.எனவே, பருவத் தேர்வு மற்றும் அதற்கான பாட முறையை ரத்து செய்து விட்டு, பொதுவாக முக்கிய பாடங்கள் மற்றும் அடிப்படை தேவைக்கான கல்வியை வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பழைய முறைப்படி, இறுதியாண்டு தேர்வில், அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகளை இடம் பெறச் செய்யலாம் என, ஆலோசிக்கப்பட்டுள்ளது.

7 comments:

  1. What about 12th syllabus reduction ?

    ReplyDelete
  2. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  3. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  4. As online classes are only for private schools there will be a mismatch in academics for govt. and private schools. How can this be sorted out. Moreover parents are facing problems in online classes.

    ReplyDelete
  5. எல்லா வேலைகளும் கணிப்பொறி மூலம் செய்யப்பட வேண்டும். ஆனால் கணிப்பொறி ஆசிரியர் நியமிக்கப்படக் கூடாது. இந்த வேலைகளையெல்லாம் பகுதி நேர ஆசிரியர்கள் (கணிப்பொறி) முழு நேரமும் செய்ய வேண்டும். மே மாதமும் செய்ய வேண்டும். ஆனால் அவர்களுக்கு 7700-லிருந்து ஒரு பைசா கூட ஏற்றிக் கொடுக்கக்கூடாது. கல்வி சார்ந்த செயல்பாடுகளில் தமிழகம் முன்னோடி என்று மைக்கை நீட்டினால் கூறிக் கொள்ள வேண்டும். ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களில் கொடுக்கும் சம்பளத்தில் பாதி கூட கொடுக்கக் கூடாது. பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களுடைய கற்பித்தல் பணிக்கு மட்டும் அரைநாள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசு நிர்ப்பந்தம் செய்தால் முக்கால்வாசி மேல்நிலைப்பள்ளிகளில் சம்பள பில் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆட்டம் கண்டு விடும். இந்த வேலைகளை செய்வதற்கு கணிப்பொறி ஆசிரியரோ அல்லது வேறு கணிப்பொறி ஆப்ரேட்டர்களோ கிடையாது. இப்படி பகுதி நேர ஆசிரியர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் மனிதாபிமானமற்றவர்கள் நிச்சயம் கடவுளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். கொஞ்சம் கூட கருணையில்லையே இவர்களுக்கு. அம்மாவால் நியமிக்கப்பட்டவர்கள் தானே என்ற எண்ணம் கூட இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி