நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் முதல்வர் - kalviseithi

Jun 17, 2020

நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் முதல்வர்


நீட் ஆன்லைன் பயிற்சி வகுப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ  படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதனை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக  பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த 2017 - 2018ம் கல்வி ஆண்டு முதல் இலவச நீட் பயற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


 2019 - 2020ம் கல்வி ஆண்டுக்கான நீட் பயற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 412 மையங்களில் நடத்தப்பட்டு வந்தன. வார இறுதி நாட்கள், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மட்டும் நீட் பயற்சி  வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மொத்தம் 27 நாட்கள் மட்டுமே நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வு தொடங்கியதையடுத்து கடந்த ஜனவரி  மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இதற்கிடையே, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தப்பின்னும், நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி  வகுப்பை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தீரஜ் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.  இதன்படி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு Amphisoft Technologies நிறுவன இணையதளம் மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நாள்தோறும் 4 மணிநேர பயிற்சி, 4 மணிநேர பயிற்சித் தேர்வர்கள் நடத்தப்படவுள்ளன. 12-ம் வகுப்பு மாணவர்கள் 7,420 பேர் நீட் இணைய பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளனர். இலவச நீட் பயற்சி வகுப்புகளில் பயின்ற மாணவர்களில் கடந்த 2017 -  2018ம் கல்வி ஆண்டில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை. 2018 - 2019ம் ஆண்டில் 5 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

 1. இதெல்லாம் சும்மாங்க.....

  ReplyDelete
 2. பலது invalid user name password என்ற வருது

  ReplyDelete
 3. application done no responce

  ReplyDelete
 4. சும்மா ரீல் ஓட்றாங்க... பல நூறு கோடியில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அரசியல்வாதியின் பைகள் மட்டுமே நிரம்பின. ஒரு நாள் கூட online வகுப்பு நடைபெறவில்லை. சும்மாங்க...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி