கணினி பாடம் புறக்கணிப்பு ஆசிரியர்கள் சங்கம் கவலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2020

கணினி பாடம் புறக்கணிப்பு ஆசிரியர்கள் சங்கம் கவலை


பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடப் பிரிவுகளில்,கணினி பயன்பாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக, கணினி ஆசிரியர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடப் பிரிவுகள் துவக்கப்படுகின்றன. மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலத்துடன் சேர்த்து, நான்கு முதன்மை பாடங்கள் இணைந்த பாடப்பிரிவுகள், ஏற்கனவே அமலில் உள்ளன. இதில், மாணவர்களுக்கான பாடச்சுமைகளை குறைக்கும் வகையில், முக்கிய பாடங்களை, மூன்றாக குறைத்து, புதிய பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இதில், கணினி பயன்பாட்டு பாடம் இடம் பெறவில்லை என, புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, மேல்நிலை பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர், பரசுராமன் அறிக்கை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கான, ஐந்து பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில், கணினி பயன்பாடு பாடம் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தகவல் தொழில்நுட்ப காலத்துக்கு, கணினியின் செயல்பாடுகளை, மாணவர்கள் அறிய வேண்டியது அவசியம். எனவே, முக்கிய பாடங்களுடன் கணினி பயன்பாடு பாடத்தையும் சேர்க்க வேண்டும்.

கலைப்பிரிவு மாணவர்கள், மற்ற பாடங்களுடன், கணினி பயன்பாடும் இணைந்த பிரிவை தேர்வு செய்ய, இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

8 comments:

  1. அட விடுங்க எல்லாரும் டாக்டர் மட்டும் ஆகட்டும் கணினி பாடம் தேவை இல்லை ஆனால் கணினி ஆசிரியர் தேவை இல்லை ஆனால் எல்லா வேலையும் பார்க்க இவனுகளுக்கு அடிமை கணிணியாளர் தேவை. அப்படி தானே பன்றானுங்க

    ReplyDelete
  2. கணினி ஏன்டா படிச்சம்னு கடுப்பாகுது

    ReplyDelete
    Replies
    1. Driver veliku pogulam naa ippa auto votura ..one day ku.1250 rupees sambarikara..sund day time 2000 vara sambarika mudikiradhu..night kadai vaikara ...so neegalum msc bed mudicha nu mathavgaluku adimaiya irruka ma sondha business pannuga udnay panathuku enga poradhunu ketudadhinga unga certificate adamanam vaiunga idhu tha best solution..indha time la passport vangi vatchukonga korna period mudicha udnay foreign niriya job varum parunga..ippiya driving , spoke English katthu vatchukonga..

      Delete
  3. 3 வருடங்கள் மேலாக PTA கணினி ஆசிரியராக வேலை செய்யும் நான் COMPUTER SCIENCE, Application படித்தும் பயனில்லாமல் போய்விட்டது 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

    ReplyDelete
  4. Anybody pls reply IPA 11&12 std computer science books iruka or illaya....nan padikum pothu eng,tam,maths,physics, chemistry, computer irukkum ipa ula pattern solunga pls

    ReplyDelete
  5. Textbook online.com website ku po books download panni parunga..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி