டிபிஐ வளாகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2020

டிபிஐ வளாகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா!


தேர்வுத்துறை இயக்குந ரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து , அதே வளாகத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண் இயக்குநரின் கார் ஓட்டுநருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இதையடுத்து டிபிஐ வளாக பணியாளர்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது . சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை யில் அமைந்துள்ளது டிபிஐ வளாகம் . இந்த வளாகத்தின் உள்ளே பள்ளிக் கல்வித்துறை சார்ந்த பல்வேறு அலுவலக கட்டிடங்கள் உள்ளன .

இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வித்துறை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் . இந்நிலையில் , அங்குள்ள தேர் வுத்துறையின் இயக்குநரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது .

இதையடுத்து அங் குள்ள பணியாளர்கள் பதற்றம் அடைந்த னர் . தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி தனது அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றிக்கொண்டார் . இதையடுத்து டிபிஐ வளாகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பணிக்கு வருகின்றனர் .

இந்த பரபரப்பு அடங்குவதற் குள் அதே வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண் இயக்குரின் கார் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று இருப் பது நேற்று உறுதி செய்யப்பட்டது . மேலும் அந்த ஓட்டுநரின் மகன் அதே அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் . அவரும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் . இதைய டுத்து ஓட்டுநரின் மகனுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது . இதன் காரணமாக , டிபிஐ வளாகத்தில் பணி யாளர்கள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

1 comment:

  1. Many candidate life spoil for trb bort that mean illogical activity of ministers &officers so affected so no problem we are salt eating getting and water dringing

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி