தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் பணியிட மாற்றம் செய்து உத்தரவு. - kalviseithi

Jun 12, 2020

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் பணியிட மாற்றம் செய்து உத்தரவு.


தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஜெ. ராதாகிருஷ்ணன் வகித்து வந்த வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் ஜெ. ராதாகிருஷ்ணன் கூடுதலாகக் கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், வணிக வரித்துறை செயலாளராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் நாள்தோறும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணனை மீண்டும் அந்த துறைக்கு மாற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

2012 -  2019ம் ஆண்டு வரை தமிழக சுகாதாரத் துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பதால், தற்போது தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை கையாளும் வகையில் அவர் சுகாதாரத் துறை செயலாளராக மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, ஜெ. ராதாகிருஷ்ணன் கரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி