அரசு பள்ளி மாணவர், 'வாட்ஸ் ஆப்' குழு - kalviseithi

Jun 28, 2020

அரசு பள்ளி மாணவர், 'வாட்ஸ் ஆப்' குழு


'ஆன்லைனில்' பாடம் நடத்தும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் துவங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னையால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வீட்டில் இருந்தே மாணவர்கள் கற்கும் வகையில், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளில், இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் வகையில், இணையதளத்தில், 'வீடியோ' பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில், வகுப்பு வாரியாக மாணவர்களின் மொபைல் போன் எண்கள் பெறப்பட்டு, வாட்ஸ் ஆப் குழுக்கள் துவக்கப்பட உள்ளன.

அதன் வாயிலாக, தினமும் பாடக்குறிப்புகளை அனுப்ப வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

1 comment:

 1. வணக்கம்.
  மன்னிக்கவும். மேலே கூறப்பட்ட செய்தியின் துவக்கமும் முடிவும் ஒன்றுக்கொன்று மாறுபாடு உடையதாக இருக்கிறது.
  தயவுகூர்ந்து கவனிக்கும்படி மிக்கப் பணிவுடன் அழைக்கிறேன்.

  (உத்தரவிடப்பட்டுள்ளது Vs ஆலோசனை கூறியுள்ளனர்)
  இவ்விரண்டும் வேறுவிதமாக சிந்திக்க வைக்கிறது.
  வாசித்தமைக்கு நன்றி. . .

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி