பொதுத்தேர்வு ரத்து - அரசு செய்ய வேண்டியது என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2020

பொதுத்தேர்வு ரத்து - அரசு செய்ய வேண்டியது என்ன?


தமிழகம் எப்போதுமில்லாத பேரிடர் காலத்தின் சிக்கியிருக்கிறது. கொரோனா தொற்று பரவி வரும் இச்சமயத்தில் , குழந்தைகளின் உயிரைக் கருத்தில் கொண்டு , தமிழக அரசு 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளது. மாணவர் நலன் சார்ந்து எடுத்துள்ள அரசின் முடிவை மகிழ்ச்சியுடன் அனைவரும் வரவேற்கிறோம். அதே சமயத்தில் , கல்வி முறையின் அடுத்த நகர்வு குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும் . நீண்ட காலமாக நம்மிடையே நிலவி வரும் , மதிப்பெண் சார்ந்த தேர்வு முறைக்கான மாற்று முறையைக் கையிலெடுக்கும் கட்டாயமும் அவசியமும் இப்போது ஏற்பட்டுள்ளது.

திறன்கள் அடிப்படையில் மாணவரை மதிப்பீடு செய்யும் நடைமுறையான CCE முறை தான் ( Continuous and Comprehensive Evaluation - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை ) மதிப்பெண்கள் சார்ந்த தேர்வுகளுக்கான சிறந்த மாற்றாக அமையும். தேசியக் கலைத்திட்டம் 2005 இன் ( என்சி எஃப் - 2005 ) பரிந்துரைப் படி , கடந்த 8 ஆண்டுகளாக பள்ளிகளில் இந்த சிசிச முறை ( தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை ) நடைமுறையில் உள்ளது. இம்முறை ஏற்கனவே 9 ஆம் வகுப்பு வரை பின்பற்றப்படுகிறது. இதே முறையை 10 ஆம் வகுப்பிற்கும் இனி வரும் காலங்களில் நீட்டிக்கலாம்.

அப்படிச் செய்தால் , அது பொதுத் தேர்வு என்ற இறுக்க மனநிலையை உடைத்து மாணவர்களின் சுதந்திரமான மகிழ்ச்சியான கற்றலுக்கு வழி வகுக்கும். அதே போல , வாழ்வியல் சார்ந்த சமூகத்தைப் புரிந்து கொள்ளும் கல்வியைக் கற்றுத்தரும் களமாகப் பள்ளிகள் மாற்றம் பெற வேண்டும். மேல்நிலைக் கல்வியில் பயிலும் பாடப் பிரிவுகள் சம வாய்ப்பு முறையில் பரவலாக்கப்பட வேண்டும். தமிழகத்தின் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் , விவசாயம் , தொழிற்கல்வி , அறிவியல் , கணக்கு , அரசியல் , வரலாறு , புவியியல் , இலக்கியம் , இசை .. என ஏராளமான துறைகளை உருவாக்கிட வேண்டும். விரும்பும் பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்யும் உரிமை எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்க இது வழிவகுக்கும் . கொரோனா காலம் , இவ்வாறான கல்விச் சீரமைப்புக் காலமாக மாற்றம் பெறுவதுதான் சரியானதாக இருக்கும்.

9 comments:

  1. CcE
    Activity பேப்பரில் ஏதாவது எழுதுவது . நன்றாக படிக்கும் ஒரு மாணவர் செய்ததை அனைவரும் செய்வது.

    ReplyDelete
  2. BeO whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  3. BeO whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  4. BeO whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  5. பல பள்ளிகளில் FA marks குருட்டுத்தனமாக போட்டுக்கொள்கிறார்கள்

    ReplyDelete
  6. ம் அப்படியே 10th students also all pass nu sollidalam. வருங்கால குழந்தைகள் படிப்பதை விட பன்னி மேய்க்க பழகி கொள்ளுங்கள் என்றும் சொல்லி ஊக்கப்படுத்தலாம்.
    #அட போம்மா! நீ வேர , ஏற்கனவே தமிழக கல்வித்துறை பாதாளத்துக்கு போய்க்கிட்ருக்கு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி