TNPSC STUDY MATERIALS! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2020

TNPSC STUDY MATERIALS!


BOX QUESTIONS

10 ஆம் வகுப்பு

2. சுற்றுச்சூழல் மேலாண்மை

1. சிப்கோ இயக்கம் 1973.

“ சிப்கோ ” என்னும் வார்த்தைக்கு பொருள் தழுவுதல் என்பதாகும் . மரங்களை வெட்ட விடாமல் கிராம மக்கள் அவற்றை வட்டமாக சூழ்ந்துகொண்டு கட்டித் தழுவியபடி நின்றதால் இப்பெயர் அமைந்தது . உத்திரப்பிரதேச ( தற்போதையை உத்தரகாண்ட் ) மாநிலத்தில் உள்ள சாமோலி என்னும் ஊரில் இவ்வியக்கம் தோன்றியது . இமயமலைப் பகுதிகளில் உள்ள காடுகளை 15 ஆண்டுகள் அழிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை பெற்று 1980 ஆம் ஆண்டு இவ்வியக்கம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது .

2. ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா , 1936 ம் ஆண்டு உத்தரகான்ட் மாநிலத்தில் துவங்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா.

3. இந்தியாவில் தற்போது 15 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன .

4. தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி பகுதி , ஒரு பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளக் காப்பக பகுதியாகும் .

5. தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் , வெங்கடாச்சலபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா ராமசாமி என்பவர் “ இந்தியாவின் முதல் பெண் வன உயிரி புகைப்படக் கலைஞர் " என்றுசர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளார் . இவர் பறவை இனங்களை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் . இவரது புகைப்படத் தொகுப்பு “ வன உயிரினங்களின் சிறந்த தருணங்கள் ”    என்னும் தலைப்பில் நவம்பர் 2014 ம் ஆண்டு   வெளியிடப்பட்டது .

6. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட வன உயிரி பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் • புலிகள் பாதுகாப்பு திட்டம் 1973 ம் ஆண்டிலும் , யானைகள் பாதுகாப்புத் திட்டம் 1992 ம் ஆண்டிலும் துவங்கப்பட்டது .
1976 ம் ஆண்டில் முதலைகள் பாதுகாப்புத் திட்டம் துவங்கப்பட்டது.
1999 ம் ஆண்டில் கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம் துவங்கப்பட்டது.
• அசாம் மாநிலத்திலுள்ள காண்டாமிருகங்களை பாதுகாக்க ' இந்திய காண்டாமிருகங்கள் பாதுகாப்பு 2020 ' என்னும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது . இதன் மூலம் குறைந்தபட்சம் 3000 ஒற்றைக் கொம்புடைய காண்டா மிருகங்களையாவது 2020 ம் ஆண்டுக்குள் பாதுகாத்திட குறிக்கோள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

7. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலக அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடு இந்தியாவாகும் .

8. தாஜ்மஹால் • உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது . • இது வெண்மை நிற பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது . இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தாஜ்மஹாலுக்கு அருகில் அமைந்துள்ளது . இதிலிருந்து உற்பத்தியாகும் சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் இப்பகுதியில் உள்ள தாஜ்மஹாலின் வெண்ணிற பளிங்கு கற்களில் மேல் படிந்து அக்கற்களை மஞ்சள் நிறமாக மாற்றியுள்ளது . • தாஜ்மகாலை சிதைவிலிருந்து பாதுகாக்க தற்போது இந்திய அரசானத வெளியேற்றும் புகைகளுக்கு குறிப்பிட்ட வரையறை அளவினை விதித்துள்ளது ,

9. 100 சூரிய வெப்ப சூடேற்றிகள் மூலம் ஒரு ஆண்டுக்கு 1500 யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும் .

10. ஷேல் வாயுக்கள் எடுப்பதற்காக இந்தியாவில் ஆறு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன , அவை கேம்பே ( குஜராத் ) , அஸ்ஸாம் - அரக்கான் ( வட கிழக்குப் பகுதி ) , கோண்ட்வானா ( மத்திய இந்தியா ) , கிருஷ்னா கோதாவரி ( கிழக்கு கடற்கரைப் பகுதி ) , காவேரி மற்றும் இந்தோ - கங்கைப் வடிநிலப் பகுதி ,

11. உலகின் மிக உயரமானதும் , மிகப் பெரியதுமான காற்றாலை ஹவாய் பகுதியில் அமைந்துள்ளது .

12. ஒரு காற்றாலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை 300 பயன்படுத்த முடியும் ,

13. 2 ம் நூற்றாண்டில் ( பொ.ஆ ) சோழ வம்சத்தைச் சேர்ந்த கரிகால் சோழ மன்னரால் கட்டப்பட்ட கல்லனையானது மிகவும் பழமையானது . இது உலகின் நான்காவது பழமையான அனையாகும் . இந்த அனை இன்றும் தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது . இவ்வனை திருச்சிராப்பள்ளி நகருக்கு 20 கி.மீ. அருகில் , காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது .

14. மின்னணுக் கழிவுகளால் உண்டாகும் பாதிப்புகள் • ஈயம் , மனிதரில் மைய நரம்பு மண்டலத்தையும் பக்க நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது , குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது .  * குரோமியம் , மூச்சுத்திணறல் ஆஸ்துமா • கேட்மியம் : சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் படிந்து அதன் பனிகளை பாதிக்கிறது . நரம்புகளை பாதிக்கின்றது . • பாதரசம் : மூளை மற்றும் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது . • பாலிவினைல் குளோரைடு ( PVC ) உள்ளிட்ட நெகிழிகள் : நெகிழிகளை எரிப்பதால் உண்டாகும்டையாக்சின்கள் இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சியையும் , பணியையும் பாதிக்கிறது .

15. மின்னணுக் கழிவுகள் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது.
* கணினிப் பொருட்கள் - 66 %
• தொலைத் தொடர்பு சாதனங்கள் 12 %
* மின்னணு சாதனங்கள் 5 %
• உயிரி மருத்துவ சாதனங்கள்- 7 %
• பிற சாதனங்கள் , உபகரணங்கள் - 6%.


🤷🏻‍♀️🎒2011-2019 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கணிதம் & திறனறிதல் வினாக்களின் தொகுப்பு!

🧚🏼‍♂️Click here to view

🥦🧚🏼‍♂️9th & 10th - உயிரியல் முழுத் தொகுப்பு!

🧚🏼‍♂️Click here to view

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி