இனி 10, +2 முறையில் மாற்றம்.. அமலுக்கு வரும் 5+3+3+4 கல்விமுறை.. புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு!. - kalviseithi

Jul 30, 2020

இனி 10, +2 முறையில் மாற்றம்.. அமலுக்கு வரும் 5+3+3+4 கல்விமுறை.. புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு!.


புதிய கல்விக்கொள்கை மூலம் நாடு முழுக்க தற்போது அமலில் இருக்கும் 10 மற்றும் +2 முறைக்கு பதிலாக புதிதாக 5+3+3+4 கல்விமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதை மத்திய அரசு விளக்கமாக வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் ஐந்து வருடம் (அங்கன்வாடி, ப்ரீ ஸ்கூல் சேர்த்து இரண்டாம் வகுப்பு வரை), அதன்பின் 5ம் வகுப்பு வரை 3 வருடங்கள், பின் மீண்டும் 8 ம் வகுப்பு வரை வரை மூன்று வருடங்கள், 12ம் வகுப்பு வரை 4 வருடங்கள் என்று இந்த கல்வி முறை கொண்டு வரப்படுகிறது.

அதன்படி இந்த வகுப்பு பிரிவுகள் 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயது வரை இந்த பாடப்பிரிவுகள் அமலுக்கு வரும். 1ம் வகுப்புக்கு முன் படிப்புகளை தொடங்கும் வகையில் இந்த கல்வி முறையை மாற்ற உள்ளனர். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மீது மட்டும் கவனம் செலுத்தும் பழக்கத்தை கைவிட்டுவிட்டு, 2ம் வகுப்பு, 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 10 மற்றும் 12ம் வகுப்பு மீது கவனம் செலுத்த வகை செய்யும் வகையில் இந்த மாற்றத்தை கொண்டு வருகிறார்கள்.

எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உடன் ஆலோசனை செய்து இந்த கல்வி முறையை கொண்டு வர உள்ளது. மொத்தம் நான்கு நிலைகள் இந்த படிப்பில் உள்ளது.
அதன்படி
அடிப்படை நிலை (Foundational Stage): ஐந்து வருடம் அங்கன்வாடி போன்ற ப்ரீ ஸ்கூல் மற்றும் இரண்டாம் வகுப்பு வரை பாடங்கள் எடுக்கப்படும். மொழி அறிமுகம், பல்வேறு பண்புகள், நீதி நெறி கல்விகள், அடிப்படை திறமைகளை கண்டறியும் கல்விகள் கொண்டு வரப்படும். விளையாட்டு ரீதியாகவும், குழந்தைகளுக்கு மொழிகளை கற்பிக்கும் வகையிலும் இந்த திட்டம் கொண்டு வரப்படும்.
தயாரிப்பு நிலை ( Preparatory Stage ): 3ம் வகுப்பில் இருந்து 5ம் வகுப்பு வரை இந்த பாடத்திட்டம் அமலில் இருக்கும். அறிவியல், கணிதம், கலை ஆகிய அடிப்படை படிப்புகள் இதில் அமலில் இருக்கும்.
மத்திய நிலை (Middle Stage): 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இந்த பாடம் அமலில் இருக்கும். இதில் குறிப்பிட்ட பாடத்திட்டங்களை முறையான அனுமதிக்கு பின் அமலுக்கு கொண்டு வருவார்கள்.
இரண்டாம் நிலை (Secondary Stage): இந்த நிலையை இரண்டு கட்டமாக அறிமுகப்டுத்தப்படுகிறார்கள். அதன்படி 9-10 ம் வகுப்பு வரை முதல் கட்டம், 11-12ம் வகுப்பு வரை இரண்டாம் கட்டம் அமலில் இருக்கும். மிக ஆழமான கல்விமுறை, வாழ்க்கை கல்வி முறை , தொழிற்கல்வி, பாடங்கள் குறித்த கல்விமுறை, திறமைகளை வளர்க்கும் கல்வி முறை இதில் அமல்படுத்தப்படும்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் மட்டும் தேர்வுகள் இருந்ததை எளிதாக்கி நான்காக பிரிக்க உள்ளனர். 5+3+3+4 பிரிவுகளில் தேர்வுகள் பிரித்து பிரித்து நடத்தப்படும். 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடர்ந்து நடக்கும். ஆனால் முழுக்க முழுக்க திறமை சார்ந்து மற்ற 5+3+3+4 பிரிவுகளிலும் தேர்வுகள் நடத்தப்படும். இது தொடர்பான விரிவான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.

10 comments:

 1. Through this NEP 2020 I think the central government going to bring public exams for 3rd, 5th and 8th standard kids.
  This may leads many dropouts.

  ReplyDelete
  Replies
  1. 10th board eluthuravan ethana peruku olunga elutha padika theriyum

   Delete
  2. EXACTLY

   BUT IN THE NAME OF SKILL EVALUATION

   Delete
 2. அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வியை நாசமா போச்சு கல்வியாளர்கள் அரசியல்வாதிகள் டிஆர்பி போர்டு செலக்சன் லிஸ்ட் சீனியர் கட் பண்ணி புதுசா நபரை கொண்டு வரணும் பணத்தை வாங்கி குட்டிச்சுவராக்கி விட்டார்கள் இனிமே மீண்டு வருவதற்கு ஒரு பத்து வருஷம் இந்த ஆட்சி முதலில் தூர எறிந்தான் நல்லது நடக்கும் தமிழ்நாட்டு எவ்வளவுதான் முன்னேற்றம் கொண்டு வந்தாலும் இந்த ஆட்சி மாற்றினால்தான் தமிழ்நாடு கல்வி மருத்துவத்துறை எல்லாமே உருப்படும்

  ReplyDelete
 3. புதிய‌ க‌ல்விக் கொள்கையில் அனைத்து ப‌குதிகளும் ஏற்புடைய‌து அல்ல‌...
  எ.கா ,5,8 வ‌குப்பு மாண‌வ‌ர்க‌ளுக்கு பொதுத் தேர்வு க‌ட்டாய‌ம்..
  க‌ல்லூரி ப‌ட்ட‌ங்க‌ளுக்கு நுழைவுத் தேர்வு க‌ட்டாய‌ம்..
  மாநில‌ அர‌சுக‌ளின் அதிகார‌ம் க‌ல்வித்துறையில் குறைப்பு..
  க‌லை,அறிவிய‌ல் ப‌டிப்புக‌ளையும் ,பொறியிய‌ல் ப‌டிப்புக‌ளையும் ஒன்றாக‌ இணைத்து ஒரே துறையின் கீழ் கொண்டு வ‌ருத‌ல்.
  மாநில‌ மொழிக‌ள் புற‌க்க‌ணிப்பு ச‌ம‌ஸ்கிருத‌ம் அதீத‌ ஊக்குவிப்பு..
  மாநில‌ வ‌ள‌ர்ச்சிக்காக‌ பாடுப‌ட்ட‌ தலைவ‌ர்க‌ள் வ‌ர‌லாறு,திருக்குற‌ள் போன்ற‌ அந்த‌ந்த‌ மாநில‌ இல‌க்கிய‌ங்க‌ள்
  போன்றவை க‌லைத்திட்ட‌த்தில் புற‌க்க‌ணிக்க‌ப்படும் அபாய‌ம்...

  இப்ப‌டி ப‌ல‌ க‌ருத்து வேறுபாடுக‌ளும்,
  ஆட்சேப‌க‌ர‌மான‌ வ‌ரைவுக‌ளும் இதில் இட‌ம் பெற்றுள்ள‌ன‌...
  வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌ அம்ச‌ங்க‌ளும் இருக்கின்ற‌ன‌...

  ஒரு ஆசிரிய‌ராக‌
  என்னுடைய‌ க‌ருத்து என்ன‌வென்றால் இது போன்ற‌ க‌ல்வித்துறையில் மிக‌ப் பெரிய‌ மாற்ற‌ங்க‌ளைக் கொண்டு வ‌ரும் போது நாடாளும‌ன்ற‌ இரு அவைக‌ளிலும் முறையாக‌ விவாதித்தும்,
  மாநில‌ ச‌ட்ட‌ம‌ன்ற‌ங்க‌ளில் இத‌ன் சாத‌க‌,பாத‌க‌ங்க‌ளை விவாதித்து அந்த‌ மாநில‌ அர‌சுக‌ளின்
  தீர்மான‌ம் ம‌ற்றும் க‌ருத்துக்க‌ள் முறையாக‌ பெற‌ப்ப‌ட்டும்,க‌ல்வி வ‌ல்லுந‌ர்க‌ள்,பெற்றோர்க‌ளின் க‌ருத்துக‌ள் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌ப்ப‌ட்டும் ச‌ட்ட‌ம் இய‌ற்றுவ‌து தான் நியாய‌மான‌தும்....
  ஏற்புடைய‌துமான‌தும் ஆகும்.

  மேலும் அதுவே ஜ‌ன‌நாய‌க‌த்தில் ந‌ம்பிக்கை கொண்ட‌ ஆட்சியாள‌ர்க‌ளின் அணுகு முறையாக‌வும் இருக்கும்..

  ReplyDelete
 4. நீ புடுங்கறது பூறாவுமே தேவையில்லாத ஆணி தான் போய் புடுங்கு போ

  ReplyDelete
 5. Is there any chance to change part time engineering degree course in New education policy.

  ReplyDelete
  Replies
  1. If you are already joined person in part time b.e. no problem will be there. But no info regarding part time courses added. The policy aims to provide education to everyone, so there will be options for everything.

   Delete
 6. 2nd class varai dtet, 3to8.b.ed ah

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி