100 நாள் வேலைத்திட்டத்தில் மண் அள்ளும் ஆசிரியர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2020

100 நாள் வேலைத்திட்டத்தில் மண் அள்ளும் ஆசிரியர்கள்!


லாக்டௌன் தொடங்கியதிலிருந்து அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் ஒவ்வொரு மாதமும் சேதாரமின்றி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால்?

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதி ஊதியம் பெற்று வந்த ஆசிரியர்களும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர்களும் கொரோனா ஊரடங்கால் வாழ்க்கையை நகர்த்துவதற்கு வழியின்றி, 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்து மண் அள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கல்லூரி ஆசிரியர்கள்
தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், தனியார் கல்லூரிகளில் சொற்ப ஊதியத்துக்கு வேலை பார்த்து வருகின்றனர். அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்களின் சம்பளத்தோடு ஒப்பிடும் போது, சுய நிதிக் கல்லூரி ஆசிரியர்களின் மாத ஊதியம் மிகக் குறைவு.
கடந்த மார்ச் மாதம் கல்லூரியில் இறுதியாண்டு நெருங்கிக் கொண்டிருக்கும்போது, கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. தற்போது மூன்று மாதங்களைக் கடந்து லாக்டௌன் நீடிக்கிறது.

அவரவர்களின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், மாதங்கள் நான்கு கடந்த பிறகும் இன்னும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் சுயநிதி கல்லூரிகளில் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரி ஆசிரியர்கள்
இதுபற்றி ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம். "ஒரு சில கல்லூரிகளில் முதல் மாதம் முழு ஊதியம் தந்தார்கள். பிறகு பாதியாகக் கொடுத்தனர். பின்பு கல்லூரிகள் திறந்த பின்பு தருவதாகவும் வீட்டில் தானே இருக்கிறீர்கள்... அப்படியிருக்கும்போது எவ்வாறு சம்பளம் தர முடியும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்

அரசு மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் இதுவரை சுயநிதி கல்லூரிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை.

வாழ்க்கையை நகர்த்துவதற்கு வேறு வழியின்றி, எவ்விதப் படிப்புச் சான்றிதழும் தேவையில்லாத வேலையாள்கள் செய்கின்ற 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்து ரோட்டில் மண் அள்ளும் வேலையைச் செய்து வருகிறோம். சிலர் இட்லிக் கடைகளை நடத்துகின்றனர்.

ஒரு பிரபலமான பள்ளியில் நல்ல செல்வாக்குடன் பணியாற்றி வந்த முதல்வர் ஒருவர், தனது சொந்த ஊரில் மனைவியுடன் சேர்ந்து தள்ளுவண்டியில் ஊர் ஊராகச் சென்று இட்லி, தோசை, வடை விற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இன்னும் சிலர் தங்களின் வீடுகளில் காய்கறி வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்" என வேதனைப்பட்டனர்.

``எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம் சார். ஆனால், கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்த நான், இப்ப ரோடு வேலை செய்வதை, நான் பாடம் சொல்லிக் கொடுத்த மாணவர்களும் அவங்க பெற்றோரும் பார்க்கும்போது, அவர்களைப் பார்த்து நான் தலைகுனிஞ்சு நிற்க வேண்டியிருக்கு அல்லது முகத்தைத் திருப்பி வைச்சிட்டு நிக்க வேண்டிவருது. அதை நினைத்து பாக்கும்போதுதான் நெஞ்சு வெடிச்சிரும் போலிருக்கு” என்றவர், ``உலக வரலாற்றில், மாணவர்களுக்கு அறிவுப் புகட்டும் ஆசிரியர்களுக்கு இப்படியொரு நிலைமை வந்திருப்பது இதுவே முதல்முறையாக இருக்கும். எனவே மத்திய, மாநில அரசுகள், அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் சுய நிதி ஊதியம் பெறும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பரிதாப நிலையைக் கருத்தில் கொண்டு, நிவாரண நிதி வழங்க வேண்டும்" என்றார் கலங்கியவாறு.

26 comments:

  1. ஆசிரியர்கள் மட்டும் உஊதியம் வாங்கவில்லை.

    ReplyDelete
  2. Good Pvt teacher ku indha veliya koduthu avnga valkaiya save pannitanga thanks..govt..

    ReplyDelete
  3. Pitchai edupadha thavira...Vera endha veliyum kuraivu alla...naga ulachu sapidavom...innum eathana month ahanalum edhvdhu velai ku poai uliapom..matha Pvt teacher mathiri kenjikitu patini poratam panna mattom...

    ReplyDelete
  4. Entha valium saiyum nalla manasu vendum govurva kuraisall neenaika vendam

    ReplyDelete
    Replies
    1. Ne Yana pa pantran Pvt teacher Vali unanku thariyathu Da una pathu vankam vacha pasanka una pathu sirikum pothu unanku antha Vali tharium sothuku picha yatuthu paru unkau purium

      Delete
    2. Thambi nannum Pvt teacher tha share auto votura ....

      Delete
  5. Correct but no security in private college staffs.so dont teach to any one in future become a Teaching job☹☹☹

    ReplyDelete
  6. True fact. Naane intha velaikku tha poren

    ReplyDelete
  7. Better our gov occupies a part of salary from the gov teachers and can provide to the private teachers . I kindly request our gov to Show mercy on the private teachers

    ReplyDelete
  8. இது சத்தமில்லாமல் சங்கடங்களை அனுபவிக்கும் சத்தியவான்களின் சோதனைக் காலம் .

    ReplyDelete
  9. தனியார் பள்ளி ஆசிரியருக்கு இந்த நிலமை இப்போது.தனியார் பள்ளியில் படிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அனைவரும் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  10. உலகம் முழுக்க இந்த நிலைமை தான். செய்வதை திருந்த செய்.

    ReplyDelete
  11. இனியாவது எம்.எல்.ஏக்கக்களை தேர்வு செய்யும் போது பட்டம்படித்தவர்களை தேர்வு செய்யணும் ஓட்டுபோட்டு கைநாட்டு எம்.எல்ஏக்கள் தமிழகத்தில் இனிதேர்வுசெய்யக்கூடாது

    ReplyDelete
  12. The teachers must be given the respect by the society.

    ReplyDelete
  13. நானும் தனியார் பள்ளிஆசிரியர் தற்போது 100 நள் வேலைக்கு செல்கிறேன் .சம்பளம்.₹120.மாணவர்கள் என்ன பார்க்கும் போது கேவலமாய் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. Pitchai edukariya illa thiruduriya kevalam pada ulachu tha na thigura appuram enna

      Delete
  14. வாத்தியாரை குறை சொல்ல னா தூக்கம் வராதே மூதேவி

    ReplyDelete
  15. Loosu payalkala......private la work pannunitu vela illana vera velai than pakkamum

    ReplyDelete
  16. இதில் நாம் வெட்கப்பட வேண்டியதில்லை. அப்படி ஒரு வேலையை நாம் செய்யும் போதும் நம்மை பார்க்கும் மாணவனுக்கு கற்றுக் கொடுக்கிறோ என்பதை புரிந்து சந்தோஷப்படுவோம். நாம் எப்பொழுதுமே ஆசிரியரே..

    ReplyDelete
  17. Not only teachers all private employees, auto drivers, shopkeepers ,vegetable vendors last but not least agricultrists everyone are struggling

    ReplyDelete
  18. Private school teachers entha velayum seiyum thiran petravarkal.anal govt teachers .........sampaalam mattum vangum suyanala vathigal

    ReplyDelete
    Replies
    1. Ea unnaku vaithu eruchal nee padichu neeyum govt job ku poai irruka veandiydhu tha na...

      Delete
  19. Tenth mark entry ku kuda private teachers ah vecheee Vela vangikitanga.govt teachers only showww thanangayum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி