11ம் வகுப்பு அகமதிப்பெண் வழங்குவதில் பாகுபாடா ? அரசாணை ரத்து கோரிய வழக்கு ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2020

11ம் வகுப்பு அகமதிப்பெண் வழங்குவதில் பாகுபாடா ? அரசாணை ரத்து கோரிய வழக்கு ஒத்திவைப்பு.



11ஆம் வகுப்பில் அகமதிப்பெண் வழங்கு தல் மற்றும் தேர்ச்சி மதிப் பெண் நிர்ணயித்தலில் பாகுபாடு காட்டும் அரசாணை எண் 50 ஐ ரத்து செய்யக்கோரிய வழக்கை ஜூலை 27 ம் தேதிக்கு ஒத்தி வைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த ராமலிங்கம் , ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு :

2017-18ம் கல்வியாண்டு முதல் 11 ம் வகுப்புத்தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது . 11 ம் வகுப் பின் மதிப்பெண்கள் 600 வெயிட்டேஜ் முறையில் கணக்கில் எடுக்கப்படும் எனவும் , தேர்ச்சி மதிப் பெண்ணாக 35 ம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது . தொழில் சார்ந்த பிரிவுகளில் , செய்முறை தேர்வுகளில் 75 மதிப்பெண்களுக்கு 20 மதிப்பெண்களைப் பெற வேண்டும். செய்முறை மற்றும் எழுத்துத்தேர்வுகளை சேர்த்து மொத்தம் 35 மதிப்பெண்கள் தேர்ச்சி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற செய்முறை தேர்வை கொண்ட மாணவர்கள் 21.47 சதவீதம் மதிப்பெண்களையும் , செய்முறை தேர்வல்லாத மாணவர்கள் 27.77 சதவீத மதிப்பெண்களையும் பெற வேண்டியுள்ளது. 6.3 சதவீத மதிப்பெண் வித்தி யாசம் உள்ளது.

இதனால் செய்முறை தேர்வற்ற மாணவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் . ஆகவே , மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டும் அரசாணை எண் 50 ஐ ரத்து செய்யவும் , அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான அகமதிப்பெண் மதிப்பெண் வழங்கும் முறையை பின்பற்றவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டி ருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் , ராஜ மாணிக்கம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. பள்ளிக்கல்வித்துறை கூடுதல் செயலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில் , " குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 சதவீதம் என்பதன் காரணமாகவே இவ்வாறு மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்ச்சி மதிப்பெண்ணை பொறுத்தவரை அனைத்து மாணவர்களுக்கும் 35 சதவிகிதம் என்றுதான் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித பாகுபாடும் இல்லை . ஆகவே இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண் டும் ” என கூறப்பட்டிருந்தது. மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து , நீதிபதிகள் வழக்கை ஜூலை 27 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி