12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு: மொத்தம் 92.3% பேர் தேர்ச்சி; 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் முதலிடம்..!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2020

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு: மொத்தம் 92.3% பேர் தேர்ச்சி; 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் முதலிடம்..!!


12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவில் 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கிய மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது. அன்றைய தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாதால் 36,000 மாணவர்களால் தேர்வில் பங்கேற்க முடியவில்லை. அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு வரும் 27-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜூன் 10-ம் தேதியுடன் அனைத்து மையங்களிலும், 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்தது.

இந்நிலையில், மார்ச் 2020 நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மார்ச் ஜூன் பருவத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2020  பருவத்தில் எழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாணாக்கர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி விகிதம்:
* மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள் 92.3%
* மாணவியர் 94.80%
* மாணவர்கள் 89.41%
* மாணவியர் மாணவர்களைவிட 5.39% அதிகம் தேர்ச்சி.
மாவட்ட வாரியாக விவரம்:
* 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்.
* 96.99% தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2-வது இடம்.
* 96.39% தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் 3-ம் இடம்.
பள்ளிகள் தேர்ச்சி சதவிகிதம்:
* அரசு பள்ளிகளில் 85.94% தேர்ச்சி
* அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.30% தேர்ச்சி
* மெட்ரிக் பள்ளிகள் 98.70% தேர்ச்சி
* இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 92.72% தேர்ச்சி
* பெண்கள் பள்ளிகள் 94.81% தேர்ச்சி
* ஆண்கள் பள்ளிகள் 83.91 தேர்ச்சி
* மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 7,127
* 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்ப பள்ளிகளின் எண்ணிக்கை 2,120
பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்;
* அறிவியல் பாடப் பிரிவுகள் 93.64%

* வணிகவியல் பாடப்பிரிவுகள் 92.96%
* கலைப்பிரிவுகள் 84.65%
* தொழிற்பாடப்பிரிவுகள் 79.88%
முக்கிய பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்:
* இயற்பியல் 95.94%
* வேதியியல் 95.82%
* உயிரியல் 96.14%
* கணிதம் 96.31%
* தாவரவியல் 93.95%
* விலங்கியல் 92.97%
* கணினி அறிவியல் 99.51%
* வணிகவியல் 95.65%
* கணக்குப் பதிவியல் 94.80%
தேர்வெழுதிய மாற்றுத்திறனாளி மாணாக்கரின் மொத்த எண்ணிக்கை 2835. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 2506.
தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 62. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 50.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி