ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு - 24.07.2020 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2020

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு - 24.07.2020 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமானதாக நிறைவேற்றப்பட்டன .

1. அஞ்சலித் தீர்மானம் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கடந்த ஜனவரி 2017 ல் துவங்கப்பட்ட நாள் முதல் மேற்கொண்ட அனைத்துப் போராட்ட இயக்க நடவடிக்கைகளில் நமது அமைப்பினை முழுமையாக ஈடுபடுத்தி , தனது எண்பதாண்டு கால இயக்க அனுபவ முதிர்ச்சியோடு செயல்பட்டு , இன்று நம்மைவிட்டு பிரிந்து சென்றுள்ள மூத்த தோழர் பாவர் கா . மீனாட்சி சுந்தரம் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது . மேலும் , கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோருக்கும் இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் நாட்டுக்காக இன்னுயிரினை நீத்த இந்திய இராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது .

2 ) கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற காலவரையற்றப் போராட்டம் முடிவுக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் அந்தப் போராட்ட காலத்தில் குற்றக் குறிப்பாணைகள் , காவல் துறை வழக்குகள் , பணியிட மாறுதல்கள் , பதவி உயர்வு மறுப்பு , ஆண்டு பாதிய உயர்வு மறுப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கு உள்ளான 5100 ஆசிரியர்கள் அரசு வாழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை இரத்து செய்யவும் , கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாக ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுத் தலைவர்கள் பேட்ரிக் ரெய்யாண்ட் , ரவிச்சந்திரன் ஆகியோர் மீது புனையப்பட்டுள்ள 17 பி குற்றச்சாட்டுகளை இரத்து செய்ய வலியுறுத்திம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பலமுறை கோரிக்கை மனுக்களை ஜாக்டோ ஜியோ வாயிலாக சமர்ப்பித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத பின்னணியில் , நடவடிக்கைகளை இரத்து செய்ய வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

3 ) எதிர்வரும் 29.07.2020 புதன்கிழமை அன்று பாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் , மாண்புமிகு அமைச்சர்கள் , தலைமைச் செயலாளர் , துறைச் செயலாளர்கள் ஆகியோரிடமும் கல்வித் துறை / கல்லூரி கல்வித் துறை இயக்குநர்களிடம் கோரிக்கை மனுவினை அளிக்க உள்ளனர் .

4 ) 29.07.2020 புதன்கிழமை அன்று மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சித் தலைவர் , மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது .

5 ) ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 27.07.2020 அன்று மாவட்டத்திலுள்ள உயர்மட்டக் குழுத் தலைவர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தினை தனி மனித இடைவெளியோடு நடத்தி , 29.07.2020 அன்று நடைபெறவுள்ளா இயக்கத்திற்கு திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

11 comments:

  1. வேற வேலைய பாருங்கய்யா

    ReplyDelete
  2. பள்ளி வளர்ச்சி,கல்வி வளர்ச்சி , மாணவர் நலன் போன்ற பணிகளில் ஈடுபடுங்கள்.சுயநல சிந்தனைகளை குறையுங்கள் ஆசிரியர்களே.

    ReplyDelete
  3. அடுத்து திமுக ஆட்சியிலதான் ரத்தாகும் போல??????

    ReplyDelete
    Replies
    1. வந்தா பார்க்கலம்

      Delete
    2. இந்த‌ ம‌க்க‌ள் விரோத‌ ஆட்சி துடைத்தெறிய‌ப்ப‌ட‌ வேண்டும்..
      ஆசிரிய‌ர்,அர‌சூழிய‌ர் ந‌ல‌னில் அக்க‌றையுள்ள‌ ஆட்சி அமைய‌ வேண்டும்...
      நாம் இந்த‌ ஆட்சியாள‌ர்க‌ளைப் ப‌ழி தீர்க்கும் நாள் ..
      தேர்த‌ல் நாள்..
      அது தொலைவில் இல்லை...
      அடிப‌ட்ட‌ புலிக‌ள் நாம்..
      அணி திர‌ள்வோம்..
      ஒன்றுப‌டுவோம்...
      வெற்றி பெறுவோம்..

      Delete
  4. அவர்களின் கோரிக்கைக்கு போராட்டம் நடத்தினாங்க. நீங்க சொன்னத கேட்டு வேலைக்கு திரும்ப போயிட்டாங்க???அப்புறம் ஏன் இன்னும் வழக்கு போட்டுகிட்டு😖😖😖😖😖😖😖

    ReplyDelete
  5. இது ஒரு தொடர் கதையா போயிட்டே இருக்கு முடிவே இல்லையா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி